சீனாவின் முதல் மின்சார விமானம்: பயணிகளுடனான சோதனை ஓட்டத்தில் வெற்றி!
பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார விமான சோதனை ஓட்டத்தில் சீனா வெற்றி பெற்றுள்ளது குறித்து...
பயணிகளை ஏற்றிச் செல்லும் மின்சார விமான சோதனை ஓட்டத்தில் சீனா வெற்றி பெற்றுள்ளது.
சீன அரசுக்கு சொந்தமான விமானத் தயாரிப்பு நிறுவனமான கோமாக் , பேட்டரி நிறுவனமான சி.ஏ.டி.எல் மற்றும் ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து சி.இ-25ஏ என்ற மின்சார விமானத்தை உருவாக்கியுள்ளன.
Advertisement
Advertisement
இந்த சி.இ-25ஏ விமானம் கடந்த பிப்ரவரியில் ஆளில்லாமல் (தானியங்கி முறையில்) சோதனை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது, கிழக்கு சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள பின்சோ நகரில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் சோதனை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
19 பேர் பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் நடைபெற்ற சோதனை ஓட்டத்தின் போது, 2 விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் ஆகியோர் பயணித்தனர்.
சோதனை ஓட்டத்தில் வானில் 16 நிமிஷங்கள் பறந்ததன் மூலம், 60.4 கிலொ மீட்டர் தூரத்தை இந்த விமானம் கடந்தது.
இந்த விமானமானது மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் 2,400 கிலோ மீட்டர் உயரத்தில் பறக்கும் திறன் கொண்டது. விமானத்தை ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 400 கி.மீ. தூரம் வரை பயணிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.