FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ஏஐ பெயரை எஸ்ஐ என மாற்றிய அதிபர் டிரம்ப்!

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெயரை சூப்பர் இன்டலிஜென்ஸ் (எஸ்ஐ) என மாற்றும் அதிபர் டிரம்ப்பின் முயற்சி குறித்து...

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ஏபி
பகிர்:

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) பெயரை சூப்பர் இன்டலிஜென்ஸ் (எஸ்ஐ) என மாற்றக்கோரிய கோப்புகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று (செப். 30) கையெழுத்திட்டார்.

வெள்ளை மாளிகையில் தொழிலதிபர்கள் எலான் மஸ்க், மார்க் ஜூகர்பெர்க், சுந்தர் பிச்சை, ஜென்சன் ஹுவாங் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைவர்களைச் சந்தித்துப் பேசிய பின்னர் இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தப் பெயர் மாற்றத்தின் மூலம், அமெரிக்காவின் அனைத்து கூட்டாட்சித் துறைகள் மற்றும் அனைத்து முகமைகளும் இனி அதிகாரப்பூர்வ ஆவணங்கள், வலைதளப் பக்கங்கள் மற்றும் அறிவிப்புகளில் 'ஏஐ' என்பதற்கு பதிலாக 'எஸ்ஐ' என்ற சொல்லையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

செயற்கை (Artificial) என்ற வார்த்தை உண்மைக்கு மாறானது மற்றும் பொருத்தமற்றது என்றும் சூப்பர் என்பதே பொருத்தமானது எனவும் குறிப்பிட்டு இப்பெயர் மாற்றத்தை டிரம்ப் அறிவித்துள்ளார்.

பெயர் மாற்றம் ஏன்?

உலகில் செயற்கை நுண்ணறிவை நோக்கியப் பயணம் பல ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கிவிட்டது. சுமார் 70 ஆண்டுகளுக்கு முந்தைய செயற்கை நுண்ணறிவு என்ற சொல்லின் கருத்தாக்கத்தை, நவீன முன்னணி அமைப்புகளின் திறன்கள் வெகுவாகத் தாண்டிவிட்டதாக அமெரிக்கா தரப்பில் கூறப்படுகிறது.

இன்றைய பல முன்னணி அறிவியல் அமைப்புகள் மனித நுண்ணறிவின் அசலைத் தாண்டி பல விஷயங்களை இலகுவாகச் செய்கின்றன. அறிவியல், மருத்துவம், மனிதர்களின் தலையீடு உள்ள இன்னும் பல துறைகளிலும் இவை பெருமளவு ஆதிக்கம் செலுத்துவதால், செயற்கை நுண்ணறிவு என்பதை விட சூப்பர் இன்டலிஜென்ஸ் என்பதே பொறுத்தமாக இருக்கும் என டிரம்ப் நிர்வாகம் கருதுகிறது.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை தலைவர்களின் பரிந்துரை மற்றும் முன்மொழிவுகளுக்காக 60 நாள்கள் காலக்கெடுவையும் டிரம்ப் நிர்வாகம் நிர்ணயித்துள்ளது. பெயர் மாற்றம் தொடர்பாக அவர்கள் அளிக்கும் பரிந்துரைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு ஏற்ப பெயர் மாற்றம் தொடர்பாக அமெரிக்க சட்டங்களில் மாற்றங்கள் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

summary

artificial intelligence renames as Super Intelligence Donald Trump Signs Agreement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments