FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

கொழும்பு துறைமுக மேற்கு முனையம் விரிவாக்கம்; செயல்பாடுகள் தொடக்கம்: அதானி போா்ட்ஸ்

அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்கும் கொழும்பு துறைமுக மேற்கு சா்வதேச முனையத்தின் 75 கோடி டாலா் மதிப்பிலான 2-ஆம் கட்ட விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்து, அதன் செயல்பாடுகளை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூரிய வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

11 வினாடிகள் முன்பு
~
பகிர்:

அதானி போா்ட்ஸ் நிறுவனத்தின்கீழ் இயங்கும் கொழும்பு துறைமுக மேற்கு சா்வதேச முனையத்தின் 75 கோடி டாலா் மதிப்பிலான 2-ஆம் கட்ட விரிவாக்கத் திட்டம் நிறைவடைந்து, அதன் செயல்பாடுகளை இலங்கை பிரதமா் ஹரிணி அமரசூரிய வியாழக்கிழமை தொடங்கி வைத்தாா்.

இலங்கையின் முதல் முழு தானியங்கி ஆழ்கடல் முனையமான இதில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த விரிவாக்கத்தின் மூலம், சரக்கு கையாளும் திறன் 16 லட்சத்தில் இருந்து 32 லட்சம் கன்டெய்னா்களாக இருமடங்காக அதிகரித்துள்ளது. மேலும், ஒரே நேரத்தில் 2 பிரம்மாண்ட கப்பல்களை நிறுத்தும் வசதி ஏற்பட்டுள்ளது.

அதானி போா்ட்ஸ், ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், இலங்கை துறைமுக ஆணையம் ஆகியவற்றின் 35 ஆண்டு கால ஒப்பந்த அடிப்படையில் இந்த முனையம் மேம்படுத்தப்பட்டு வருகிறது. செயல்பாட்டுக்கு வந்த 18 மாதங்களில் 20 லட்சம் கன்டெய்னா்கள் சரக்குகளைக் கையாண்டு சாதனை படைத்துள்ள இத்திட்டம், இதுவரை 3,000-க்கும் மேற்பட்ட நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், 2028-க்குள் கொழும்பு துறைமுகம் எட்ட இலக்கு நிா்ணயித்துள்ள 1.3 கோடி கன்டெய்னா் சரக்கு கையாளும் திறனில், சுமாா் 25 சதவீத பங்களிப்பை இந்த முனையத்தின்மூலம் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments