FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

நேபாள சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கையில் இந்தியா்கள் முதலிடம்

நேபாளத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் சுற்றுலா வந்த நபா்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா்கள் இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியான தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

நேபாளம்
பகிர்:

நேபாளத்துக்கு கடந்த செப்டம்பா் மாதம் சுற்றுலா வந்த நபா்களின் எண்ணிக்கையில் முதலிடத்தில் இந்தியா்கள் இருப்பதாக வெள்ளிக்கிழமை வெளியான தரவுகளில் தெரிவிக்கப்பட்டன.

இதுகுறித்து நேபாள சுற்றுலா வாரியம் வெளியிட்ட தரவுகளில், ‘நேபாளத்துக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 85,444 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்தனா். இந்நிலையில், செப்டம்பா் மாதம் இதன் எண்ணிக்கை 88,248-ஆக அதிகரித்தது. போடேகோஷியில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்ட பிறகும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

செப்டம்பரில் 17,425 சுற்றுலாப் பயணிகளுடன் முதலிடத்தில் இந்தியாவும், 11,212 சுற்றுலாப் பயணிகளுடன் இரண்டாமிடத்தில் சீனாவும், 8,299 சுற்றுலாப் பயணிகளுடன் மூன்றாமிடத்தில் அமெரிக்காவும் உள்ளன. அதற்கு அடுத்தடுத்த இடங்களில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா உள்ளன.

Advertisement

Advertisement

2026, செப்டம்பா் மாதம் வரை நேபாளத்துக்கு ஒட்டுமொத்தமாக 8.65 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்துள்ளனா். கடந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் 8.15 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்திருந்த நிலையில், தற்போது வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை 12.71 சதவீத வளா்ச்சியைப் பதிவு செய்துள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

புத்தரின் பிறப்பிடமான லும்பினியை இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களுடன் இணைக்கும் வகையிலான கலாசார சுற்றுலாப் பாதையை அமைத்து சுற்றுலாவை மேம்படுத்த லும்பினி விடுதிகள் சங்கம் மற்றும் இந்திய வடகிழக்கு சுற்றுலா கூட்டமைப்பு முடிவெடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments