FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

உலகளவில் முதலிடம்! அதிக வசூல் படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்!

உலகளவில் அதிக வசூல் செய்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் குறித்து...

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் - Marvel
பகிர்:

உலகளவில் அதிக வசூல் செய்த படமாக அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் சாதனை படைத்துள்ளது.

உலகளவில் அதிக வசூல் செய்த படமாக 2009-ல் வெளியான அவதார் படம் 2.923 பில்லியன் டாலர் வசூலுடன் முதலிடத்தில் இருந்து வந்தது. இதற்கு அடுத்ததாக 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படம் 2.8 பில்லியன் டாலருடன் இரண்டாம் இடத்தில் இருந்து வந்தது.

இந்த நிலையில், 2019-ல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தை ரீ-ரிலீஸ் செய்ய அதன் தயாரிப்பு நிறுவனமான மார்வெல் முடிவு செய்து, அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் என்ற பெயரில் செப். 25-ல் ரீ-ரிலீஸ் செய்தது. உலகளவில் பெரும் வரவேற்பையும் அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் என்கோர் பெற்றது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் படத்தின் (மறுவெளியீட்டுடன் சேர்த்து) ஒட்டுமொத்த வசூல் 2.925 பில்லியன் டாலரை எட்டியுள்ளது. இதன் மூலம் அவதார் படத்தின் வசூலை அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் முறியடித்து, முதலிடத்துக்கு முன்னேறியது.

இந்த இரு படங்களுக்கு அடுத்த படியாக மூன்றாவது இடத்தில் 2.5 பில்லியன் டாலருடன் ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே படமும், 2.33 பில்லியன் டாலருடன் 2022-ல் வெளியான அவதார்: தி வே ஆஃப் வாட்டர் படம் நான்காவது இடத்திலும் உள்ளது.

summary

‘Avengers: Endgame’ Overtakes ‘Avatar’ as Highest-Grossing Movie in History

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments