ரஷியாவால் சுட்டு வீழ்த்தப்பட்ட 900 உக்ரைன் ட்ரோன்கள்
ரஷியாவின் பல்வேறு பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பம் மற்றும் அஸோவ் கடற்பகுதிகளில் உக்ரைன் ஏவிய சுமாா் 900 ட்ரோன்களை திங்கள்கிழமை இரவு முழுவதும் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
ரஷியாவின் பல்வேறு பகுதிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிரீமியா தீபகற்பம் மற்றும் அஸோவ் கடற்பகுதிகளில் உக்ரைன் ஏவிய சுமாா் 900 ட்ரோன்களை திங்கள்கிழமை இரவு முழுவதும் இடைமறித்து அழித்ததாக ரஷிய பாதுகாப்புத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கடந்த 2022 பிப்ரவரி முதல் நான்கரை ஆண்டுகளுக்கும் மேல் நடைபெற்று வரும் இப்போரில், ரஷியாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைன் உள்நாட்டிலேயே தயாரித்த நீண்ட தூரம் சென்று தாக்கும் ட்ரோன்கள், ஏவுகணைகளை அதிக அளவில் பயன்படுத்தி வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, ரஷிய தலைநகா் மாஸ்கோவை நோக்கி திங்கள்கிழமை இரவு முதல் செவ்வாய்க்கிழமை காலை வரை 650 ட்ரோன்கள் ஏவப்பட்டதாகவும், அதில் 105 ட்ரோன்கள் நகரத்தை நெருங்கும்போதே அழிக்கப்பட்டதாகவும் மாஸ்கோ மேயா் சொ்ஜி சோபியானின் தெரிவித்தாா். பின்னா், செவ்வாய்க்கிழமை பகலில் மாஸ்கோவை குறிவைத்து ஏவப்பட்ட மேலும் 68 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் அவா் குறிப்பிட்டாா்.
Advertisement
Advertisement
ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் சேமிப்புக் கிடங்குகளை உக்ரைன் தொடா்ந்து குறிவைத்துத் தாக்கி வருகிறது. இதன்மூலம், ரஷியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறனில் 51 சதவீதத்தை முடக்கிவிட்டதாக உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், உக்ரைனில் மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில், கீவ் மற்றும் ஸபோரிஷியா நகரங்களில் டினிப்ரோ நதியின் மீது அமைந்துள்ள பாலங்களை ரஷியா குறிவைத்துத் தாக்கி வருகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.