எச்-1பி ஊழியர்களுக்கான ‘கிரீன் கார்டு’ திட்டத்திலிருந்து முன்னணி ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம்!
எச்-1பி ஊழியர்களுக்கான ‘கிரீன் கார்டு’ திட்டத்திலிருந்து முன்னணி ஐடி நிறுவனங்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறித்து...
அமெரிக்காவில் ‘எச்-1பி’ விசா மூலம் தங்கிப் பணியாற்றும் ஊழியர்களுக்கு நிரந்தர குடியுரிமைக்கான ‘கிரீன் கார்டு’ விண்ணப்பிக்கும் திட்டத்திலிருந்து, முன்னணி ஐ.டி. நிறுவனங்களான மைக்ரோசாஃப்ட், டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, காக்னிஸண்ட் போன்ற நிறுவனங்களை டிரம்ப் நிர்வாகம் இன்று (அக். 8) இடைநீக்கம் செய்துள்ளது.
இந்த நிறுவனங்கள் நிரந்தர தொழிலாளர் சான்றிதழ் திட்டத்தில் (PERM) முறைகேடு செய்ததாகக் குற்றம்சாட்டி, அமெரிக்க தொழிலாளர் நலத்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கூறுகையில், கணக்கீட்டின்படி, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பணியிலிருந்து நீக்கிய ஒவ்வொரு தொழிலாளருக்கும் ஈடாக, ஒன்றரை வெளிநாட்டு ஒப்பந்தப் பணியாளர்களை அந்த இடத்தில் பணியமா்த்தியுள்ளது’ என்று தெரிவித்தார்.
Advertisement
Advertisement
அமெரிக்கர்களின் வேலைவாய்ப்புகளைப் பறிப்பதாகவும், முறைகேடுகள் அதிகரித்துள்ளதாகவும் கூறி, ‘எச்-1பி’ விசா திட்டத்துக்கு டிரம்ப் ஆதரவாளா்கள் நீண்டகாலமாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்திய ஐடி நிறுவனங்களுடன் சேர்ந்து மைக்ரோசாஃப்ட், அடோப் போன்ற அமெரிக்க நிறுவனங்களும் இத்திட்டத்திலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leading IT companies have been suspended from the ‘Green Card’ program for H-1B employees.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.