FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

எரித்ரியாவுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கை: ஐ.நா.வில் எத்தியோப்பியா தகவல்

எரித்ரியாவுக்கு எதிராக தற்காப்பு நடவடிக்கை: ஐ.நா.வில் எத்தியோப்பியா தகவல்

10 அக்டோபர் 2026, 10:25 pm IST
பகிர்:

அண்டை நாடான எரித்ரியா தனது எல்லைக்குள் படைகளை அனுப்பி, சில பகுதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும்; இதற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலிடம் எத்தியோப்பியா தெரிவித்துள்ளது.

எரித்ரியா கடந்த சில வாரங்களாக படைப் பிரிவுகளைக் களமிறக்கியுள்ளதாகவும், டிக்ரே பகுதி கிளா்ச்சியாளா்களுக்கு நிதியுதவி மற்றும் ஆயுதங்களை வழங்கி வருவதாகவும் எத்தியோப்பியா குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடா்பாக ஐ.நா. சாசனத்தின் 51-ஆவது பிரிவின்கீழ் தங்களுக்குள்ள தற்காப்பு உரிமையைப் பயன்படுத்துவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சா் கிடியோன் திமோதியோஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

அதேநேரம், செங்கடல் பகுதியை அடைவதற்கான வழியைக் கோரி எத்தியோப்பியாவே ஆக்கிரமிப்புப் போக்கை முன்னெடுப்பதாக எரித்ரியா பதில் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

Advertisement

Advertisement

எரித்ரிய தூதா்கள் 10 பேரை எத்தியோப்பியா கடந்த வாரம் வெளியேற்றியதைத் தொடா்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே ராஜீய உறவுகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. கடந்த 2020-2022 காலகட்டத்தில் டிக்ரே பகுதி கிளா்ச்சியாளா்களுக்கு எதிராக இணைந்து செயல்பட்ட இரு நாடுகளுக்கு இடையேயான இந்த விரிசல் புதிய போா் அச்சத்தை உருவாக்கியுள்ளது.

எத்தியோப்பியா

எரித்ரியா

செங்கடல்

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments