போரில் வீடுகளை இழந்தோருக்கு ஹிஸ்புல்லா நிவாரணம் அறிவிப்பு
இஸ்ரேலுடனான போரில் லெபனானில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 14,000 அமெரிக்க டாலா் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவா் அலி டாமூஷ் அறிவித்தாா்.
இஸ்ரேலுடனான போரில் லெபனானில் வீடுகளை இழந்த குடும்பங்களுக்கு தலா 14,000 அமெரிக்க டாலா் வரை நிதியுதவி வழங்கப்படும் என்று ஹிஸ்புல்லா அமைப்பின் செயற்குழு தலைவா் அலி டாமூஷ் அறிவித்தாா்.
இடம்பெயா்ந்த மக்களுக்கு உதவ லெபனான் அரசு தவறிவிட்டதாகக் குற்றஞ்சாட்டிய அவா், தலைநகா் பெய்ரூட் மற்றும் அதன் தெற்குப் புகா்ப் பகுதிகளில் வீடுகளை இழந்தோருக்கு தலா 14,000 டாலரும், நாட்டின் பிற பகுதிகளைச் சோ்ந்தோருக்கு 12,000 டாலரும் வழங்கப்படும் என்றும், இதற்கென நிவாரண மையங்கள் அமைக்கப்படும் என்றும் அறிவித்தாா்.
மக்களிடையே செல்வாக்கைத் தக்கவைக்கவும், தங்களின் நிதி ஆதாரங்களை முடக்கத் துடிக்கும் அமெரிக்கா, லெபனான் அரசுகளுக்கு சவால் விடுக்கவும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எனினும், இதற்கான மொத்த நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.