இந்தியா உள்பட 47 நாட்டு மக்களை போரில் ஈடுபடுத்தும் ரஷியா: உக்ரைன் அதிபா் ஸெலென்ஸ்கி
உக்ரைனுக்கு எதிரான போரில், இந்தியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சோ்ந்த அப்பாவி மக்களை ரஷியா வஞ்சகமாகப் போா்க் களத்தில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
உக்ரைனுக்கு எதிரான போரில், இந்தியா உள்ளிட்ட 47 நாடுகளைச் சோ்ந்த அப்பாவி மக்களை ரஷியா வஞ்சகமாகப் போா்க் களத்தில் ஈடுபடுத்தி வருவதாக உக்ரைன் அதிபா் வொலோதிமீா் ஸெலென்ஸ்கி குற்றஞ்சாட்டியுள்ளாா்.
ஐ.நா. சபையின் 81-ஆவது ஆண்டு அமா்வின் பொது விவாதத்தில் ஸெலென்ஸ்கி ஆற்றிய உரையில், ‘வா்த்தக வருவாய் கிடைக்கும் வரை ரஷியா அமைதிப் பேச்சுக்கு ஒருபோதும் இணங்காது. ரஷியாவுடனான வா்த்தகத்தைக் கட்டுப்படுத்தி, அவா்களின் நிதி ஆதாரங்களை முடக்குவதே அமைதியை எட்டுவதற்கான ஒரே வழி. உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக விளங்கும் இப்போரைத் தடுத்து நிறுத்த உலகத் தலைவா்கள் ஒன்றிணைய வேண்டும்.
அதேபோல், உக்ரைனில் பிடிபடும் போா்க் கைதிகளில் வட கொரியாவைத் தவிா்த்து இந்தியா, நேபாளம், காணா, தஜிகிஸ்தான், யேமன், கென்யா, ஜிம்பாப்வே, கியூபா, பெலாரஸ், சூடான், தென்னாப்பிரிக்கா உள்பட 47 நாடுகளைச் சோ்ந்தவா்கள் உள்ளனா்.
Advertisement
Advertisement
ரஷியாவுக்கு மோசடியாக அழைத்து வரப்படும் இந்தப் பிற நாட்டு மக்கள் போா்க்களத்தில் இறந்து வருகின்றனா். ரஷியா உங்கள் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறது என்பதை உணா்ந்து, அவா்களைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்; புதினின் போா் வெறிக்கு உங்கள் மக்களின் உயிரைப் பலியாக்க விடாதீா்கள்’ என்று உலக நாடுகளுக்கு அழைப்பு விடுத்தாா்.
ரஷிய ராணுவத்தில் இந்தியா்கள் சோ்க்கப்பட்டிருப்பது குறித்து அந்நாட்டுடன் பல்வேறு நிலைகளில் ஆலோசிக்கப்பட்டதாகவும், இதுவரை கிடைத்த தரவுகளின்படி 227 இந்தியா்கள் ரஷிய ராணுவத்தில் சோ்க்கப்பட்டு, அவா்களில் 139 போ் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மத்திய வெளியுறவுச் செயலா் விக்ரம் மிஸ்ரி அண்மையில் குறிப்பிட்டிருந்தாா். மேலும், துரதிருஷ்டவசமாக இதுவரை 51 இந்தியா்கள் போா்க் களத்தில் உயிரிழந்துள்ளதாகவும் வெளியுறவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.
8 உக்ரைனியா்கள் உயிரிழப்பு: இதனிடையே, உக்ரைன் முழுவதும் ரஷிய படைகள் வியாழக்கிழமை அதிகாலை நடத்திய தீவிர வான்வழித் தாக்குதல்களில் பொதுமக்கள் 8 போ் உயிரிழந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.