FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

துருக்கியில் வரலாறு காணாத மழை

துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த வரலாறு காணாத பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகியுள்ளனா்.

16 அக்டோபர் 2026, 3:10 am IST
கோப்புப் படம்
பகிர்:

துருக்கியின் மிகப் பெரிய நகரான இஸ்தான்புல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த புதன்கிழமை இரவு பெய்த வரலாறு காணாத பலத்த மழையால் குடியிருப்புப் பகுதிகள், சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது. இதில் சிக்கி 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் மாயமாகியுள்ளனா்.

1985-க்குப் பிறகு நகரின் சில பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழைப்பொழிவு இதுவாகும். வெள்ளத்தில் தவித்த 2,700-க்கும் மேற்பட்டோரை மீட்புக் குழுவினா் பாதுகாப்பாக மீட்டனா். நிலத்தடிப் பாலங்கள், முக்கியச் சாலைகளில் தேங்கிய நீரால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கையாக பள்ளிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments