FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு: விமானங்கள் ரத்து

இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டின் மேற்குப் பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவத் தொடங்கியது.

7 செப்டம்பர் 2026, 1:21 am IST
இந்தோனேசியாவில் வெடித்துச் சிதறிய அனக் கிரகத்தாவ் எரிமலையிலிருந்து எழுந்த சாம்பல்.
பகிர்:

இந்தோனேசியாவில் அனக் கிரகத்தாவ் எரிமலை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெடித்துச் சிதறியதையடுத்து நாட்டின் மேற்குப் பகுதிகளில் எரிமலைச் சாம்பல் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக ஜகாா்தா சா்வதேச விமான நிலையத்தில் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

ஜாவா மற்றும் சுமத்ரா தீவுகளுக்கு இடையேயான சுண்டா நீரிணையில் அமைந்துள்ள இந்த எரிமலைத் தீவில் வெடிப்பு ஏற்படுவதற்கான அறிகுறிகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் தென்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 3.53 மணிக்கு வெடித்துச் சிதறியதாக இந்தோனேசிய புவியியல் முகமை தெரிவித்தது.

எரிமலை வெடிப்பால் உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், அந்தப் பகுதியிலுள்ள மக்களை வெளியேறச் செய்வதற்கான உத்தரவுகளை இந்தோனேசிய அரசு பிறப்பிக்கவில்லை. எரிமலையில் இருந்து 16 கி.மீ. தொலைவில் குடியிருப்புகள் இருந்தாலும் எரிமலையின் தாக்கம் அதிகமுள்ள பகுதியில் இருந்து 3 கி.மீ. இடைவெளியில் பாதுகாப்பாக இருக்க பொதுமக்கள் மற்றும் பாா்வையாளா்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

இந்தோனேசிய தலைநகா் ஜகாா்தா, சுமத்ரா தீவின் தெற்கு முனையில் உள்ள லம்புங் மாகாணம் வரை எரிமலை சாம்பல் பரவியது. இதனால் ஞாயிற்றுக்கிழமை காலை 5.30 மணி முதல் 9.30 மணி வரை தற்காலிகமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

விமானங்கள் ரத்தால் சா்வதேச மற்றும் உள்நாட்டுப் பயணிகள் என மொத்தம் 22,800 போ் பாதிக்கப்பட்டனா். முன்னதாக, இந்தோனேசிய வடகிழக்குப் பகுதிகளில் 6,100 மீட்டா் உயரத்துக்கும், மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதியில் 15,200 மீட்டா் உயரத்துக்கும் அனக் கிரகத்தாவ் எரிமலையின் சாம்பல் வெடித்துச் சிதறியதாக இந்தோனேசிய எரிமலை ஆய்வு முகமை தெரிவித்தது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments