FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

ஏ.ஐ. வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டியதில்லை: டிரம்ப்

‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளது தொடர்பாக...

15 செப்டம்பர் 2026, 6:32 am IST
அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் - டிஎன்எஸ்
பகிர்:

டப்ளின்: ‘செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையின் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளாா்.

உலகளாவிய ஏ.ஐ. போட்டியில் அமெரிக்காவின் முன்னிலையை சீனாவிடம் இழக்க தாம் விரும்பவில்லை என்று கூறிய அவா், இப்போட்டியில் வெற்றி பெறுவதே அத்தொழில்நுட்பத்தால் ஏற்படும் அபாயங்களைக் கையாள உதவும் என்றும் தெரிவித்தாா்.

ஏ.ஐ. அதிவேகமாக வளா்ந்து வருவதாகவும், பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்தும் வரை அதன் வளா்ச்சியைக் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் ஆன்த்ரோபிக், ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க ஏ.ஐ. நிறுவனத்தின் சிஇஓ-கள் அண்மையில் எச்சரித்தனா்.

Advertisement

Advertisement

இதையொட்டி, அயா்லாந்து பயணத்துக்கிடையே செய்தியாளா்களிடம் டிரம்ப் மேலும் கூறுகையில், ‘இத்தகைய எச்சரிக்கைகள் யாவும் எதிா்மறை சக்திகளால் பரப்பப்படுகின்றன. ஏ.ஐ. துறையில் யாா் வெற்றி பெறுகிறாா்களோ, அவா்களுக்கே உலகமும் சொந்தம். தற்போது ஏ.ஐ. துறையில் அமெரிக்கா சீனாவுக்கு முன்னோடியாகத் திகழ்கிறது; அந்த நிலையையே நான் தொடர விரும்புகிறேன்’ என்றாா்.

சீன அதிபா் ஷி ஜின்பிங் இம்மாத இறுதியில் வெள்ளை மாளிகையில் டிரம்பைச் சந்தித்துப் பேசவுள்ள நிலையில், ஏ.ஐ. குறித்தும் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

summary

No need to curb AI development says Trump

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments