அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை இல்லை: டிரம்ப் அழைப்பை நிராகரித்த ஈரான்!
போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், அதனை ஈரான் நிராகரித்துள்ளது.
போர்நிறுத்தம் தொடர்பான பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக டிரம்ப் தெரிவித்த நிலையில், அதனை ஈரான் நிராகரித்துள்ளது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருந்தார். ஆனால், ஈரானின் பாதுகாப்புத் துறை அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை நிராகரித்துள்ளது.
டிரம்ப்பின் அழைப்பு தொடர்பாக ஈரானின் தேசிய பாதுகாப்புத் துறை செயலாளர் மொஹ்சென் ரெஸாயி தனது எக்ஸ் பதிவில், “இனி பேச்சுவார்த்தை கிடையாது என்பதிலிருந்து நாங்கள் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருக்கிறோம் என்பது வரை அமெரிக்க அதிபரின் முரண்பாடான சமிக்ஞைகளைக் கண்டு யாரும் திசைதிரும்ப வேண்டாம்.
Advertisement
Advertisement
எண்ணெய் வர்த்தகம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை சார்ந்த சூழல் மாறிவிட்டது. சேதத்தைக் குறைக்க எடுக்கும் நடவடிக்கைகளால் வரப்போகும் நிகழ்வுகளைத் தடுக்க முடியாது. ஈரானின் நிபந்தனைகளை நிறைவேற்றுவதாக அமெரிக்கா வாக்குறுதி கொடுக்கும் வரை அவர்களுடன் பேச்சுவார்த்தை இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.
போர்நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள இது மிகவும் ஆரம்பநிலை என்று பல நாள்களாகக் கூறி வந்த டிரம்ப், நேற்று தனது சமூக ஊடகப் பதிவில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாகக் கூறினார்.
அந்தப் பதிவில், "வீழ்ச்சியடைந்து வரும் ஈரான், மிக விரைவாகவும் தீவிரமாகவும் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மேற்கொள்ள விரும்புகிறது. அமெரிக்கா இதில் ஈடுபட வேண்டுமா வேண்டாமா என்பதை நான் தீர்மானிப்பேன். ஆனால், அப்படியான பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக உள்ளோம்” என தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.
போர் நிறுத்தம் மற்றும் ஹோர்முஸ் நீரிணை மீதான முற்றுகையை விலக்கிக் கொள்ள,
போரில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடு மற்றும் பொருளாதாரத் தடைகளை நீக்குவது போன்ற கோரிக்கைகளை அமெரிக்காவிடம் ஈரான் வலியுறுத்தியுள்ளது. ஆனால், அமெரிக்கா இந்த கோரிக்கைகளை ஏற்க மறுத்து வருகிறது.
Iran has rejected Trump's statement expressing readiness to hold talks on a ceasefire.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.