FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

சுடானில் தங்க சுரங்கம் சரிந்து 60 பேர் பலி!

ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் சரிந்தது பற்றி..

22 வினாடிகள் முன்பு
தங்க சுரங்க விபத்து - X
பகிர்:

ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் சரிந்து 60 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கு கோர்டோபனில் உள்ள எல்-நஹொட் நகருக்கு அருகில் அமைந்துள்ள அல்-சாரா என்ற தங்கச் சுரங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த தங்கச் சுரங்கத்தில் 62 பேர் தங்கத்தை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தங்கச் சுரங்கத்தின் மேற்கூரை திடீரென சரிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் 60 சுரங்கத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். 2 பேர் படுகாயத்துடன் உயிரி பிழைத்தனர்.

Advertisement

Advertisement

கடந்த 2023-ஆம் ஆண்டு முதல் சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக பலரும், சுரங்கத் தொழிலில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சுரங்க விபத்து குறித்து அறிந்த மீட்புக்குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments