நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி
நாமக்கல் அருகே 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலியான விபத்து தொடர்பாக...
நாமக்கல்: நாமக்கல் அருகே புதன்கிழமை அதிகாலை 2 கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அருகே மொலைப்பட்டி கிராமத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர், தங்களது காரில், பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான கரூர் நோக்கி சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக வந்து கொண்டிருந்தனர். அப்போது, திருச்செந்தூர் சென்று விட்டு பெங்களூரூ நோக்கி மற்றொரு குடும்பத்தினர் எதிர்புற சாலையில் திரும்பி சென்று கொண்டிருந்தனர். அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார் கரூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பள்ளபட்டியை சேர்ந்த காரை ஓட்டி வந்த கார்த்திக்குமார் (35), அவரது தந்தை செல்வராஜ்(60), தாய் காந்திமதி(55) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலே பலியாகினர். எதிர்புற சாலையில் காரை ஓட்டி வந்த பெங்களூருவைச் சேர்ந்த கிசான்கெளடா (19) என்பவர் படுகாயமடைந்து, நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அந்த காரில் வந்த 3 பேரும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Advertisement
Advertisement
முன்னதாக, விபத்து குறித்து தகவல் அறிந்த நல்லிபாளையம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். விபத்தில் பலியான 3 பேரின் உடல்களை கைப்பற்றி, நாமக்கல் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காத அனுப்பி வைத்தனர்.
திருச்செந்தூரில் இருந்து, பெங்களூரு நோக்கி திரும்பிச் சென்ற (தார்)ஜீப் வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, சாலை பிரிப்பானை உடைத்துக் கொண்டு சென்று, எதிரே கரூர் நோக்கி சென்று கொண்டிருந்த சிறிய கார் (கிளான்சா) மீது, மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்து குறித்து நல்லிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Three people died in a head-on collision between two cars near Namakkal
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.