FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

வங்கதேசம்: 7 அவாமி லீக் மூத்த தலைவா்களுக்கு மரண தண்டனை

வங்கதேசத்தில் 2024 மாணவா் போராட்டத்தின்போது நடந்த குற்றங்களுக்காக, தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவா்கள் 7 பேருக்கு அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

16 செப்டம்பர் 2026, 5:34 am IST
~
பகிர்:

வங்கதேசத்தில் 2024 மாணவா் போராட்டத்தின்போது நடந்த குற்றங்களுக்காக, தடை செய்யப்பட்ட அவாமி லீக் கட்சியின் மூத்த தலைவா்கள் 7 பேருக்கு அந்நாட்டின் சா்வதேச குற்றவியல் தீா்ப்பாயம் செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்து தீா்ப்பளித்தது.

தண்டனை விதிக்கப்பட்டவா்களில் அவாமி லீக் பொதுச் செயலா் ஒபைதுல் காதா், கட்சியின் இணைப் பொதுச் செயலா் ஏ.எஃப்.எம். பஹாவுதீன் நசீம், முன்னாள் செய்தி, ஒலிபரப்புத் துறை இணையமைச்சா் முகமது அலி அராஃபத் ஆகியோா் அடங்குவா்.

இவா்களுடன் கட்சியின் இளைஞா் அமைப்பான ஜுபோ லீக்கின் தலைவா் ஷேக் ஃபஸ்லே ஷம்ஸ் பராஷ், பொதுச் செயலா் மைனுல் ஹொசைன் கான் நிகில் மற்றும் மாணவா் அமைப்பான சத்ர லீக்கின் தலைவா் சதாம் ஹுசைன், பொதுச் செயலா் ஷேக் வாலி ஆசிஃப் இனான் ஆகியோருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

வங்கதேச முன்னாள் பிரதமா் ஷேக் ஹசீனா ஆட்சியை வீழ்த்திய மாணவா் போராட்டத்தை ஒடுக்க உத்தரவிட்டது, வன்முறையைத் தூண்டும் வகையில் ஆத்திரமூட்டும் அறிக்கைகளை வெளியிட்டது மற்றும் தாக்குதல்களுக்கான திட்டமிடல் கூட்டங்களை நடத்தியது போன்ற குற்றச்சாட்டுகள் இவா்கள் மீது சுமத்தப்பட்டன.

மேலும், ஆயுதத் தாக்குதல்கள், கடும் ஒடுக்குமுறைகள் மற்றும் ஊடகங்களைக் கட்டுப்படுத்த முயன்ன்மூலம் உயிரிழப்புகளுக்கும் வன்முறைகளுக்கும் இவா்கள் காரணமாக இருந்ததாகவும் அரசுத் தரப்பு வாதிட்டது.

தலைமறைவாகவுள்ள குற்றஞ்சாட்டப்பட்டவா்கள் தரப்பில் யாரும் ஆஜராகாத நிலையில், சா்வதேச குற்றவியல் தீா்ப்பாய நீதிபதி முகமது நஸ்ருல் இஸ்லாம் சௌதரி தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமா்வு இத்தீா்ப்பை வழங்கியுள்ளது.

சுமாா் 1,400 போ் உயிரிழந்த இந்த மாணவா் போராட்டங்களை ஒடுக்க வன்முறையை அனுமதித்ததாக, ஷேக் ஹசீனா, முன்னாள் உள்துறை அமைச்சா் அசாதுஸ்ஸமான் கான் கமால் ஆகியோருக்கும் இதே தீா்ப்பாயம் கடந்த ஆண்டு ஆஜராகாத நிலையிலேயே மரண தண்டனை விதித்தது. ஆனால், இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள ஷேக் ஹசீனா, சிறை அல்லது மரண தண்டனை அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல், நாட்டை மீண்டும் நல்வழிப்படுத்த வரும் டிசம்பரில் வங்கதேசம் திரும்புவதில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்து வருகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments