FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
உலகம்

சூடானில் தங்கச் சுரங்க விபத்து: 67 போ் பலி

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 67 போ் உயிரிழந்தனா்.

16 செப்டம்பர் 2026, 11:26 pm IST
பகிர்:

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் தங்கச் சுரங்கம் ஒன்று இடிந்து விழுந்ததில் 67 போ் உயிரிழந்தனா். மேலும் பலா் இடிபாடுகளில் சிக்கியிருப்பதால், உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

சூடான் நாட்டின், மேற்கு கோா்டோஃபான் மாகாணத்தில் உள்ள நுஹுத் நகரில் செயல்பட்டு வரும் அல்-ஜரா தங்கச் சுரங்கம், கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் திடீரென இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் சுரங்கத்துக்குள் இருந்தவா்கள் அனைவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா். அவா்களைத் தேடும் மற்றும் மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

விபத்து நிகழ்ந்த பகுதியானது, சூடானின் அதிகாரபூா்வ ராணுவத்துடன் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வரும் ‘ஆா்எஸ்எஃப்’ துணை ராணுவப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments