FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஈரான் தூதரை வெளியேற்றிய ஸ்வீடன்! உறவு முறிவு?

ஈரானிய தூதரை ஸ்வீடன் அரசு வெளியேற்றியுள்ளது குறித்து...

16 செப்டம்பர் 2026, 9:34 pm IST
ஈரானிய தூதரை வெளியேற்றிய ஸ்வீடன் - கோப்புப் படம்
பகிர்:

ஸ்வீடன் அரசு அந்நாட்டுக்கான ஈரானின் தூதரை வெளியேற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான போர் வளைகுடா நாடுகள் மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கி வருகின்றது.

இந்த நிலையில், தலைநகர் ஸ்டாக்ஹோமில் உள்ள தூதரகத்தில் இருந்து ஈரானிய தூதரை நேரில் அழைத்து அவரை நாட்டை விட்டு வெளியேற அறிவுறுத்தியதாக, ஸ்வீடனின் வெளியுறவு அமைச்சகம் இன்று (செப். 16) தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

இதையடுத்து, தூதரக உறவுகளுக்கான வியன்னா உடன்படிக்கைக்கு முரணான செயல்பாடுகளைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், இதுபற்றிய முழுமையான விவரங்கள் அளிக்கப்படவில்லை.

இத்துடன், ஸ்வீடனில் உள்ள இஸ்ரேலியர்களுக்கு எதிராகவும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் ஈரானின் நடவடிக்கைகள் இருப்பதாக, ஸ்வீடனின் சட்ட அமைச்சர் குன்னார் ஸ்ட்ரோமர் கூறியுள்ளார்.

ஸ்வீடனில் உள்ள இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிராக வன்முறைகளை மேற்கொள்ள உள்நாட்டைச் சேர்ந்த குற்றவாளிக் குழுக்களை ஈரான் பணியமர்த்தியதாக, ஸ்வீடனின் பாதுகாப்புத் துறையினர் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஈரான் தொடர்ந்து மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

summary

Swedish government has expelled Iran's ambassador.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments