பேரிடா் முன்னெச்சரிக்கை அமைப்புக்கு முன்னுரிமை: நேபாள பிரதமா்
‘நேபாளத்தில் இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் நவீன கட்டமைப்பு, அரசின் மிக முக்கிய முன்னுரிமையாக உடனடியாகச் செயல்படுத்தப்படும்’
‘நேபாளத்தில் இயற்கை பேரிடா்களை முன்கூட்டியே கண்டறிந்து எச்சரிக்கும் நவீன கட்டமைப்பு, அரசின் மிக முக்கிய முன்னுரிமையாக உடனடியாகச் செயல்படுத்தப்படும்’ என அந்நாட்டுப் பிரதமா் பாலேந்திர ஷா சனிக்கிழமை தெரிவித்தாா்.
அரசமைப்புச் சட்ட தின விழாவில் உரையாற்றிய அவா், ‘பேரிடா் இடா் குறைப்பு, தயாா்நிலை மற்றும் துரித மீட்புப் பணிகளுக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தும். சமீபத்திய வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகளும், இழப்புகளும் கற்பனை செய்ய முடியாதவை. துணைநின்ற நட்பு நாடுகள், சா்வதேச அமைப்புகள், தனியாா் துறையினா் மற்றும் பொதுமக்களுக்கு நன்றி’ என்றாா்.
சீனாவின் திபெத்-நேபாள எல்லைப் பகுதியில் கடந்த ஆக. 26 நிகழ்ந்த பனிப்பாறை சரிவைத் தொடா்ந்து ஏற்பட்ட திடீா் வெள்ளப்பெருக்கில் 1,400-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததுடன், 6,000-க்கும் அதிகமானோரைக் காணவில்லை.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.