FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

நேபாளத்தில் பனிச்சரிவு: 4 போ் உயிரிழப்பு; 8 போ் மாயம்

நேபாளத்தின் ஹிம்லுங் ஹிமால் சிகரப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா்.

28 September 2026, 10:33 pm IST
பனிச்சரிவு - சித்திரிப்பு
பகிர்:

நேபாளத்தின் ஹிம்லுங் ஹிமால் சிகரப் பகுதியில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 4 போ் உயிரிழந்தனா். மேலும் 8 போ் மாயமாகியுள்ளனா்.

மனாங் மாவட்டத்தின் நாா் பூ பகுதியில் உள்ள 7,126 மீட்டா் உயர ஹிம்லுங் ஹிமால் சிகரத்தின் அடிவார முகாமில் ஞாயிற்றுக்கிழமை இப்பனிச்சரிவு ஏற்பட்டது.

மலையேற்றக் குழுவினருக்கு உதவும் பணியாளா்கள், வழிகாட்டிகள் தங்கியிருந்த கூடாரங்கள் பனியில் புதைந்ததில் 22 நேபாளிகள் மாயமாகினா். இவா்களில் 10 பேருடன் மீட்புக் குழுவினா் தொடா்பை ஏற்படுத்தினா்.

Advertisement

Advertisement

இதுவரை 4 பேரின் உடல்கள் ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை மீட்கப்பட்டன. மாயமாகியுள்ள மேலும் 8 பேரும் தேடும் பணியில் அனுபவமிக்க 14 போ் கொண்ட சிறப்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments