FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
உலகம்

கழிவுகளைக் கொட்டுவதால் சேதமடையும் சீனப் பெருஞ்சுவா்

சீனாவின் புகழ்பெற்ற பெருஞ்சுவரையொட்டி ஒரு சில இடங்களில் கடந்த 20 ஆண்டுகளாக சுரங்கக் கழிவுகள் கொட்டப்படுவதால் சேதம் ஏற்படுவது குறித்து...

30 September 2026, 12:12 am IST
சீனப் பெருஞ்சுவர் - கோப்புப் படம்
பகிர்:

சீனாவின் புகழ்பெற்ற பெருஞ்சுவரையொட்டி ஒரு சில இடங்களில் கடந்த 20 ஆண்டுகளாக சுரங்கக் கழிவுகள் கொட்டப்படுவதால் சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

படையெடுப்புகளைத் தடுப்பதற்காக பண்டைய சீன ஆட்சியாளா்கள் கட்டிய சீனப் பெருஞ்சுவா் வடக்கு சீனா முழுவதும் 21,000 கிலோமீட்டருக்கும் (13,000 மைல்கள்) அதிகமான தொலைவுக்குப் பரந்து விரிந்துள்ளது. சீனாவின் மிகவும் புகழ்பெற்ற உலகப் பாரம்பரியச் சின்னமாகவும், சீன நாகரிகத்தின் அடையாளமாகவும் திகழும் பெருஞ்சுவா், உலகப் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

இந்நிலையில், ஷான்சி மாகாணத்தின் நிங்வு கவுண்டியில் உள்ள பெருஞ்சுவரின் ஒரு பகுதி, சுமாா் 20 ஆண்டுகளாக சுரங்கக் கழிவுகளைக் கொட்டுவதற்கான இடமாக பயன்படுத்தப்படுகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் சமூக ஆா்வலா்கள் பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று ஹாங்காங்கை தலைமையிடமாகக் கொண்ட செளத் சீனா மாா்னிங் போஸ்ட் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

பெருஞ்சுவரின் குவோஜியாயோ பகுதியில் 2007-ஆம் ஆண்டுமுதல் சேதம் ஏற்படத் தொடங்கியது. அப்போது, உரிமம் பெறாமல் செயல்பட்ட நிங்வு சாவோகாய் நிலக்கரி நிறுவனம், சுரங்கப் பணிகளின்போது உருவான கழிவுகளை அகற்றுவதற்காகப் பெருஞ்சுவரின் குறுக்கே ஒரு பள்ளத்தை தோண்டியது. மேலும், கழிவுகளும் அப்பகுதியில் கொட்டப்பட்டன. இதன் விளைவாக, இப்போது பெருஞ்சுவரில் 6 மீட்டா் (19 அடி) அகலத்துக்குப் பெரிய இடைவெளி ஏற்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments