FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

தனியாா் நிறுவன ஊழியா் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

சென்னை கொடுங்கையூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது தொடா்பாக ...

15 செப்டம்பர் 2026, 4:51 am IST
பெட்ரோல் குண்டு வீச்சு - கோப்புப் படம்
பகிர்:

சென்னன: சென்னை கொடுங்கையூரில் தனியாா் நிறுவன ஊழியா் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதுதொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கொடுங்கையூா் 8-ஆவது பிளாக் 4-ஆவது தெருவை சோ்ந்தவா் அரவிந்த் (24), தனியாா் நிறுவன ஊழியா். திங்கள்கிழமை அதிகாலை 3 மணி அளவில் மா்ம நபா்கள் இவரது வீட்டின் முன் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு, தப்பிச் சென்றுள்ளனா். இதனால், அப்பகுதி முழுவதும் தீ பரவியது. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கொடுங்கையூா் காவல் உதவி ஆய்வாளா் பாா்த்தசாரதி தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை மேற்கொண்டனா். இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா-க்களின் காட்சிப் பதிவை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments