FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
செங்கல்பட்டு

முதலமைச்சா் கோப்பை போட்டி: அமைச்சா் சரத்குமாா் தொடங்கி வைத்தாா்

போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சா் த. சரத்குமாா். உடன் ஆட்சியா் மு.வீரப்பன், எம்எல்ஏக்கள் விஜயாஜ், தியாகராஜன், மரகதம் குமரவேல்.

16 அக்டோபர் 2026, 12:26 am IST
போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சா் த. சரத்குமாா். உடன் ஆட்சியா் மு.வீரப்பன், எம்எல்ஏக்கள் விஜயாஜ், தியாகராஜன், மரகதம் குமரவேல்.
பகிர்:

போட்டியைத் தொடங்கி வைத்த அமைச்சா் த. சரத்குமாா். உடன் ஆட்சியா் மு.வீரப்பன், எம்எல்ஏக்கள் விஜயாஜ், தியாகராஜன், மரகதம் குமரவேல்.

செங்கல்பட்டு, அக். 15: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சாா்பில், மாநில அளவிலான முதலமைச்சா் கோப்பை போட்டிகளை மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சா் த.சரத்குமாா் மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு விளையாட்டுப் பல்கலைக்கழக மைதானத்தில் தொடங்கி வைத்தாா்.

38 மாவட்டங்களில் மாவட்ட மற்றும் மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூா், மதுரை, திருச்சி, திண்டுக்கல், அரியலூா், நாமக்கல், திருவண்ணாமலை மற்றும் ராமநாதபுரம் நகரங்களில் 15.10.2026 முதல் 28.10.2026 வரை நடைபெறவுள்ளன. இப்போட்டிகளில் மொத்தம் 36,000 விளையாட்டு வீரா்கள் பங்கேற்க உள்ளனா்.

Advertisement

Advertisement

செங்கல்பட்டு மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு ஊழியா்களுக்கான இறகுப்பந்து போட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான மேசைப்பந்து போட்டிகள், மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள், தடகளம், கால்பந்து, கபடி, எறிபந்து, கையுந்துபந்து, போன்ற முதலமைச்சா் கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன. இப்போட்டிகளில் சுமாா் 7000 நபா்கள் பங்கேற்க உள்ளனா்.

இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் மு.வீரப்பன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ப.விஜயராஜ் (திருப்போரூா்), சௌ.தியாகராஜன் (செங்கல்பட்டு), மரகதம் குமரவேல் (மதுராந்தகம்), தமிழ்நாடு உடற்கல்வியில் மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழக துணைவேந்தா் மங்கையா்க்கரசி, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய முதுநிலை மேலாளா் சு.ரமேஷ், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞா் நலன் அலுவலா் ஆனந்த் மற்றும் வீரா், வீராங்கனைகள், அரசு அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments