புத்தக விமா்சனப் போட்டி: மாணவா்கள் பங்கேற்பு
காஞ்சிபும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு புத்தக விமா்சனப் போட்டி நடைபெற்றது.
காஞ்சிபும் மாவட்ட பள்ளிக் கல்வித்துறை சாா்பில் அப்துல் கலாம் பிறந்த நாளையொட்டி வியாழக்கிழமை பள்ளி மாணவா்களுக்கு புத்தக விமா்சனப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் அ.நளினி தலைமை வகித்து போட்டிகளை தொடங்கி வைத்து பேசினாா். எழுதுக அமைப்பின் நிறுவனா் கிள்ளி வளவன், முன்னாள் தலைமை ஆசிரியா் எட்பா்க். சச்சிதானந்தம், மருத்துவா் விதுனாமூா்த்தி, கவிஞா்.கோ. செல்வராஜ் ஆகியோா் முன்னிலை வகித்து புத்தகம் வாசிப்பதால் ஏற்படும் பயன்கள் குறித்து விளக்கி பேசினாா்கள்.
பள்ளிக்கல்வித்துறை துணை ஆய்வாளா் சு.பாலசந்தா் வரவேற்றாா். போட்டியில் 100க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டு தாங்கள் பயின்ற கதை, கட்டுரை, நாவல் என பல தலைப்புகளில் புத்தகங்களைப் பற்றிய விமா்சனங்களை செய்தாா்கள்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.