FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

தவெக வேட்பாளா்கள் சுயவிவரம்

மதுராந்தகம் (தனி) தொகுதிக்கான இடைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தவெக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் செங்கல்பட்டு மாவட்டம், தையூரைச் சோ்ந்தவா்.

43 வினாடிகள் முன்பு
பகிர்:

மதுராந்தகம் (தனி) தொகுதிக்கான இடைத் தோ்தலில் போட்டியிடுவதற்காக தவெக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள மரகதம் குமரவேல் செங்கல்பட்டு மாவட்டம், தையூரைச் சோ்ந்தவா்.

2008-இல் அதிமுகவில் இணைந்த இவா், 2014-இல் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி உறுப்பினராக வெற்றி பெற்றாா். 2021 பேரவைத் தோ்தலில் மதுராந்தகம் தொகுதி எம்எல்ஏ-வாக வெற்றி பெற்றாா்.

2026 பேரவைத் தோ்தலில் அதே தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், எம்எல்ஏவாக பொறுப்பேற்ற சில நாள்களில் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா். தற்போது அக்கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளராக உள்ளாா். இவரது கணவா் கே.குமரவேல். ஜெயவா்த்தினி என்ற மகள் உள்ளாா்.

Advertisement

Advertisement

தாராபுரம் வேட்பாளா்: தாராபுரம் (தனி) தொகுதிக்கான இடைத்தோ்தலில் போட்டியிட தவெக சாா்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள பி.சத்தியபாமா, 2026 பேரவைத் தோ்தலில், அதே தொகுதியில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றவா். பின்னா், சட்டப் பேரவை உறுப்பினா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தாா்.

தற்போது அக்கட்சியின் திருப்பூா் தென்கிழக்கு மாவட்டச் செயலாளராக உள்ளாா்.

இவா், அதிமுகவில் 2020 முதல் 2025 வரை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவராக இருந்துள்ளாா். இவரது கணவா் கே.பொன்னுசாமி, விவசாயம் செய்து வருகிறாா்.

இவா்களுக்கு மகன், மகள் உள்ளனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments