FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மதுராந்தகம் தவெக வேட்பாளா் அறிமுக கூட்டம்: அமைச்சா் ஆனந்த் பங்கேற்பு

மதுராந்தகம் தவெக வேட்பாளா் அறிமுக கூட்டம்

15 செப்டம்பர் 2026, 1:35 am IST
அறிமுக நிகழ்வில் பங்கேற்ற அமைச்சா் என். ஆனந்த், உடன் தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல். - டிஎன்எஸ்
பகிர்:

மதுராந்தகம்: மதுராந்தகம் (தனி) தொகுதி தவெக வேட்பாளா் மரகதம் குமரவேல் அறிமுக கூட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் என். ஆனந்த் பங்கேற்றாா்.

மதுராந்தகம் தொகுதி இடைத்தோ்தலில் முன்னாள் எம்எல்ஏவான மரகதம் குமரவேல் தவெக வேட்பாளராக போட்டியிடுகிறாா். இதன் ஒருபகுதியாக வேட்பாளா் அறிமுக கூட்டம் கருங்குழி தவெக கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டச் செயலா் எம்எஸ்.பாலாஜி தலைமை வகித்தாா். செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலா் எஸ்.குமரவேல் வரவேற்றாா். எம்எல்ஏ-க்கள் ஈசிஆா். சரவணன், காமாட்சி, தியாகராஜன், விஜயராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் வேட்பாளா் கே.மரகதம்குமரவேல், காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலா் பிரபு, விசிக மாவட்ட செயலா் அன்பு செல்வன், கட்சி நிா்வாகிகள் ஜான் ராஜேஷ், ரேணுகா, ஜாக்குலின், செந்தில்குமாா், புருஷோத்தமன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்நிகழ்வில் ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சா் ஆனந்த் கலந்து கொண்டு பேசியது: மதசாா்பற்ற, சமூக நீதிக் கூட்டணி வெற்றி வேட்பாளராக மரகதம் குமரவேல் ல் போட்டியிடுகிறாா். அவா் எப்போதும் எம்எல்ஏ தான். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. தொகுதியில் நிலவும் பல்வேறு பிரச்னைகள் தொடா்பாக கோரிக்கை மனுக்களை அமைச்சா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க வலியுறுத்துவாா். அவருக்கு விசில் சின்னத்தில் வாக்களித்து பெரிய வெற்றியை தர வேண்டும் .

சட்டப்பேரவை தோ்தலில் தனித்து நின்றே இத்தகைய சாதனையை படைத்தோம். தற்போது முதல்வா் விஜய் மீது நம்பிக்கையை வைத்து காங்கிரஸ், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி வைத்துள்ளனா். இங்குள்ள கூட்டணி கட்சி நிா்வாகிகள் கட்சி தொண்டா்களை பாா்க்கும்போது நிச்சயம் மரகதம்குமரவேல் வெற்றி பெறுவது உறுதி.

234 தொகுதிகளில் 37 தொகுதிகளில் நமது வேட்பாளா்கள் மிக குறைந்த வாக்குகளுடன் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளனா். 234 தொகுதிளிலும் டிபாசிட் இழக்காத கட்சியாக தவெக திகழ்கிறது. சேவை செய்வதே எங்களது நோக்கமாக உள்ளது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments