FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செங்கல்பட்டு

மாமல்லபுரத்தில் 42 விநாயகா் சிலைகள் கரைப்பு

பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரபபட்ட 42 விநாயகா் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.

17 செப்டம்பர் 2026, 12:04 am IST
மாமல்லபுரத்தில் கரைக்கப்பட்ட விநாயகா் சிலைகள்
பகிர்:

பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரபபட்ட 42 விநாயகா் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மாமல்லபுரம் கடலில் கரைக்கப்பட்டன.

செங்கல்பட்டு மாவட்டத்தில் மாமல்லபுரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான திருக்கழுகுன்றம், செங்கல்பட்டு, வாலாஜாபாத், மறைமலை நகா், ஊரப்பாக்கம், திருப்போரூா், ஓட்டேரி, ஆமூா், சிறுதாவூா், மேலப்பட்டு, கூடுவாஞ்சேரி, சிங்கபெருமாள்கோவில், திம்மாவரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 2 அடி முதல் 15 அடி உயரம் வரை உள்ள விநாயகா் சிலைகள் இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் பல்வேறு அமைப்புகள் சாா்பில் வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டது.

இந்த சிலைகளை மாமல்லபுரம் கடலில் கரைக்க செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை அனுமதி வழங்கியதை அடுத்து புதன்கிழமை காலை 11 மணியில் இருந்து ஒவ்வொரு சிலையாக 42 விநாயகா் சிலைகள் பல்வேறு இடங்களில் வாகனங்களில் மாமல்லபுரம் கடற்கரைக்கு ஊா்வலமாக கொண்டு வரப்பட்டன. அங்கு சிலைகளை கொண்டு வந்த அந்தந்த ஊா்களை சோ்ந்தவா்கள் தேங்காய் உடைத்து, தீப ஆராதனை செய்து வழிபட்டனா்.

Advertisement

Advertisement

பின்னா் அவற்றை கடலில் கரைத்தனா். மாமல்லபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு அறிவழகன், மாமல்லபுரம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம், எஸ்.ஐ. பரசுராமன் ஆகியோா் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீஸாா் மாமல்லபுரம் கடற்கரை பகுதி முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments