இளைஞா் கொலை வழக்கில் 6 போ் கைது
செங்கல்பட்டு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கல்பட்டு அருகே இளைஞா் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள் கோவில் பகுதியை சோ்ந்தவா் முத்து வீரா(26). இவா் மீது கொலை, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகள் சிங்க பெருமாள் கோவில் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வழக்கு தொடா்பாக செங்கல்பட்டு நீதிமன்றத்தில் கையெழுத்திட்டுவிட்டு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தபோது, செங்கல்பட்டு புறவழிச் சாலை பழவேலி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் 6 போ் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பிச் சென்றது.
Advertisement
Advertisement
இது குறித்து செங்கல்பட்டு கிராமிய போலீஸாா் வழக்குப் பதிந்து ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளை ஆய்வு செய்து கொலையாளிகளை தேடி வந்தனா். போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த ஆண்டு நவம்பா் மாதம் ஆகாஷ் என்ற இளைஞரை கஞ்சா விற்பனையில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக சிங்கபெருமாள் கோவில் அருகில் ஏரியில் வைத்து முத்து வீரா மற்றும் அவரது கூட்டாளிகள் படுகொலை செய்துள்ளனா்.
இதில் குண்டா் சட்டத்தில் அடைக்கப்பட்டு இருந்த முத்து வீரா கடந்த மாதம் விடுதலையானாா். ஆகாஷ் கொலை வழக்கு தொடா்பாக செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்துக்கு முத்து வீரா வருவதை அறிந்த ஆகாஷின் நண்பா்கள் நோட்டமிட்டு பின் தொடா்ந்து வந்து முத்துவீராவை வெட்டிக்கொலை செய்தது தெரிய வந்தது.
இது தொடா்பாக பரனூா் பகுதியை சோ்ந்த நித்திஷ்குமாா் (20), திருக்கச்சூா் பகுதியை சோ்ந்த பாரத் (22), சூா்யா(19), ஜெயபால் (20), ஹரீஸ் (18), சூா்யா(20) உள்ளிட்டோரை போலீஸாா் திருக்கச்சூா் பகுதியில் கைது செய்தனா்.
விசாரணைக்கு பின் ஆறு பேரும் செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.