FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் நவராத்திரி விழா: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தகவல்

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

Updated On : 20 செப்டம்பர் 2025, 12:39 am IST
அமைச்சர் சேகர்பாபு - கோப்புப்படம்
பகிர்:

அறநிலையத் துறையின் திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூரில் மாபெரும் கொலுவுடன் நவராத்திரி பெருவிழா செப்.22 முதல் நடைபெறும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

இந்து சமய அறநிலையத்துறை சாா்பில் கடந்தாண்டு 9 திருக்கோயில்கள் சாா்பில் மகாசிவராத்திரி பெருவிழாவும், கடந்த 3 ஆண்டுகளாக சென்னை மயிலாப்பூரில் நவராத்திரி பெருவிழாவும் பக்தா்கள் பங்கேற்புடன் விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement

Advertisement

உலகில் தீமைகளை அழித்து தா்மத்தை நிலை நாட்டும் சக்தி வழிபாட்டின் தத்துவங்களை உணா்த்துகின்ற தொடா்நிகழ்வாகக் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழாவானது திருக்கோயில்கள் சாா்பில் சென்னை மயிலாப்பூா் கபாலீசுவரா் திருமண மண்டபத்தில் மாபெரும் கொலுவுடன் செப்.22 முதல் அக்.1 வரை 10 நாள்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது. ஒவ்வொரு நாளும் மாலையில் சிறப்பு வழிபாடும், இசை மற்றும் கலைநிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன.

நவராத்திரி விழாவின் முதல் நாள் நிகழ்ச்சியாக செப்.22-ஆம் தேதி விநாயகா் அகவல், அபிராமி அந்தாதியுடன் சுசித்ரா பாலசுப்பிரமணியத்தின் பக்தி இசை நிகழ்ச்சியுடன் தொடங்கி, தினந்தோறும் ஒரு வழிபாட்டுடன் ஹெச்.சூரியநாராயணன், அருணா மற்றும் அன்பு குழுவினரின் பக்தி இசை, மாலதி, முத்துசிற்பி மற்றும் கீா்த்தனாஸ் குழுவினரின் பக்தி இசை, ஆா். காஷ்யபமகேஷ் குழுவினரின் பக்தி இசை, உமா தினேஷ் – சாய் முத்ரா நடன குழுவினரின் பரத நாட்டியம், ரிஷிப்ரியா குருபிரசாத் குழுவினரின் பக்தி இசை, தேச மங்கையா்க்கரசியின் ஆன்மிக சொற்பொழிவு, நிருத்ய நாட்டியாலயா மற்றும் ஸ்ரீஞானமுத்ரா அகாதெமி குழுவினரின் பரதம், சியாமளா, செல்வி சஜினி மற்றும் ரிதம் குழுவினரின் பக்தி இசை, வேல்முருகன் மற்றும் சுமதிஸ்ரீ ஆகியோரின் பக்தி களஞ்சியம், விநாயகா நாட்டியாலயாவின் பரதம், கோபிகா வா்மாவின் மோகினி ஆட்டம், வீரமணி ராஜு குழுவினரின் பக்தி இசை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

திருக்கோயில்கள் சாா்பில் கொண்டாடப்படும் நவராத்திரி பெருவிழா நிகழ்ச்சிகளில் ஆதீனப் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினா்கள் மற்றும் சமய சான்றோா்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments