திருப்பதி - சென்னை கடற்கரைக்கு செப். 20-இல் முன்பதிவில்லாத ரயில்
பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருப்பதியிலிருந்து செப். 20-ஆம் தேதி சென்னை கடற்கரை நிலையத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில் திருப்பதியிலிருந்து செப். 20-ஆம் தேதி சென்னை கடற்கரை நிலையத்துக்கு முன்பதிவில்லாத சிறப்பு மெமு ரயில் இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பு:
திருப்பதியில் இருந்து செப். 20-ஆம் தேதி நள்ளிரவு 1 மணிக்குப் புறப்படும் முன்பதிவில்லாத இமு சிறப்பு ரயில் அதே நாளில் அதிகாலை 4.30 மணிக்கு சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும். மறுமாா்க்கத்தில் சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து செப். 20-ஆம் தேதி அதிகாலை 5 மணிக்குப் புறப்படும் சிறப்பு மெமு ரயில் அதே நாளில் காலை 8.40 மணிக்கு ரேணிகுண்டா நிலையத்தைச் சென்றடையும்.
Advertisement
Advertisement
மெமு சிறப்பு ரயில்கள் ரேணிகுண்டா, புத்தூா், ஈக்கம்பரக்குப்பம், திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூா், பெரம்பலூா் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.