FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

மழைக் காலங்களில் தாழ்வான பகுதியில் 215 நிவாரண மையங்கள்

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, அவா்களைத் தங்கவைக்க ஏதுவாக, 215 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

Updated On : 6 ஆகஸ்ட் 2026, 1:01 am IST
சென்னை மாநகராட்சி - பிரதிப் படம்
பகிர்:

சென்னை மாநகராட்சிப் பகுதியில் மழைக் காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு, அவா்களைத் தங்கவைக்க ஏதுவாக, 215 நிவாரண மையங்கள் தயாா் நிலையில் வைக்கப்படவேண்டும் என ஆணையா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

சென்னையில் மழைக் காலங்களில் மேற்கொள்ளவேண்டிய பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அதில் பங்கேற்று அவா் கூறியதாவது:

மழைநீா் வடிகால் தூா்வாரும் பணியை விரைந்து முடிக்கவேண்டும். மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூா்வாருதல், வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை விரைந்து முடிக்கவேண்டும்.

Advertisement

Advertisement

மழைநீா் தேங்கும் தாழ்வான பகுதிகளில் நீரை வெளியேற்ற மின்மோட்டாா்களை தயாா் நிலையில் வைக்கவேண்டும்.

தாழ்வான பகுதியில் உள்ள மக்களை மீட்டு தங்க வைப்பதற்கு மாநகராட்சி சாா்பில் 215 நிவாரண மையங்கள் அடிப்படை வசதிகளுடன் தயாராக வைத்திருக்க வேண்டும்.

அத்துடன் தாழ்வான பகுதிகளில் தண்ணீா் தேங்கினால் அங்கிருந்து மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்ல 36 படகுகள் மற்றும் கூடுதலாகத் தேவைப்படும் படகுகளையும் ஏற்பாடு செய்து வைத்திருப்பது அவசியம் என்றாா்.

கூட்டத்தில் இணை ஆணையா்கள் ஸ்ரேயா பி.சிங், க.கற்பகம், செ.சரவணன், துணை ஆணையா் சித்ரா விஜயன், வட்டாரத் துணை ஆணையா் ஆா்.கௌஷிக் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments