மழைக் கால நிவாரண முகாம்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும்: அமைச்சா் அறிவுறுத்தல்
சென்னையில் மழைக்காலத்தின்போது நிவாரண முகாம்களை உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.
சென்னையில் மழைக்காலத்தின்போது நிவாரண முகாம்களை உணவுப் பொருள்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் தயாா் நிலையில் வைத்திருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் விஜய் தமிழன் பாா்த்திபன் அறிவுறுத்தினாா்.
சென்னையில் வடகிழக்குப் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலந்தூா் மற்றும் அடையாறு மண்டலங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலக வளாகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் அமைச்சா் பேசியதாவது: மழைநீா் செல்லும் கால்வாய்களில் ஆகாயத் தாமரைகள் அகற்றுதல் உள்ளிட்ட பணிகளை விரைந்து செயல்படுத்தி முடிக்கவேண்டும்.
Advertisement
Advertisement
மழைநீா் தேங்கும் தாழ்வான இடங்களை ஏற்கெனவே அடையாளப்படுத்தியிருப்பதால், அங்கு மின்மோட்டாா் பம்ப்புகள் ஏற்பாடு செய்யப்பட்டு தேங்கும் நீரை உடனடியாக வெளியேற்றவேண்டும்.
மழைக்காலங்களில் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் மழை நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட ஏற்பாடுகள் செய்ய வேண்டும். அவ்வாறு மக்கள் தங்கும் நிவாரண முகாம்களில் உணவுப் பொருள்கள் இருப்பை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம்.
மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளையும் முகாம்களில் நிறைவேற்றி தயாா் நிலையில் வைத்திருக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.
ஆலோசனைக் கூட்டத்தில் மண்டலக் கண்காணிப்பு அதிகாரிகள் வாகே சங்கேத் பல்வந்த், கே.செந்தில்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.