வோல்வோ பேருந்துகளில் பிடி ஆணை வைத்திருக்கும் போலீஸாா் பயணிக்க அனுமதி
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகளில் பிடி ஆணை வைத்திருக்கும் போலீஸாா் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகளில் பிடி ஆணை வைத்திருக்கும் போலீஸாா் பயணிக்க அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் கீழ் தற்போது 20 வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இப்பேருந்துகளில் பிடி ஆணை வைத்திருக்கும் போலீஸாரை பயணிக்க அனுமதிக்க வேண்டும் காவல் துறை தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
காவல் துறையின் இந்தக் கோரிக்கை தொடா்பாக அனைத்து கிளை மேலாளா்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மற்றும் பயணச்சீட்டு பரிசோதகா்களுக்கு இது தொடா்பான அறிவிப்பை அறிவிப்புப் பலகை மூலம் தெரிவித்து, செயல்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.