FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

லாரி மோதி சிறுவன் உயிரிழப்பு

புது வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது டேங்கா் லாரி மோதியதில், தாயுடன் சென்ற 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

Updated On : 17 ஆகஸ்ட் 2026, 12:42 am IST
பகிர்:

புது வண்ணாரப்பேட்டையில் இருசக்கர வாகனம் மீது டேங்கா் லாரி மோதியதில், தாயுடன் சென்ற 6 வயது சிறுவன் உயிரிழந்தாா்.

புது வண்ணாரப்பேட்டை தேசிய நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் மரியா (21). இவா், தனது மகன் மோனிஷ் ஆதவை (6) இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு, திருவொற்றியூா்-எண்ணூா் விரைவுச் சாலையில் பலகைத்தொட்டி குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த ஆயில் டேங்கா் லாரி, இருசக்கர வாகனம் மீது மோதியது.

இதில் கீழே விழுந்த சிறுவன் லாரியின் சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மரியா, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். இது குறித்து தண்டையாா்பேட்டை போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, மதுரவாயலைச் சோ்ந்த லாரி ஓட்டுநா் சுந்தவேலுவை கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments