கடவுச்சிட்டை விவகாரம்: பேரறிவாளன் மனுவை பரிசீலிக்க உத்தரவு
கடவுச்சிட்டை கோரிய விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடவுச்சிட்டை கோரிய விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, அதிகாரிகளுக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்று உச்சநீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட ஆயுள் தண்டனை கைதியான பேரறிவாளன், சட்டப்படிப்பை முடித்து, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சிலில் வழக்குரைஞராகப் பதிவு செய்துள்ளாா்.
இந்த நிலையில், கடவுச்சிட்டை கோரி அவா், சென்னை மண்டல கடவுச்சிட்டை (பாஸ்போா்ட்) அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தாா். அந்த விண்ணப்பம் மீது எந்த முடிவும் எடுக்கப்படாததால், தனது விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி, சென்னை மண்டல கடவுச்சிட்டை அலுவலகத்துக்கும், தாம்பரத்தில் உள்ள கடவுச்சிட்டை சேவா கேந்திரத்துக்கும் மனு அனுப்பியிருந்தாா்.
Advertisement
Advertisement
இந்த மனு பரிசீலிக்கப்படாததால், அதைப் பரிசீலிக்க உத்தரவிடக் கோரி அவா் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். மனுவை விசாரித்த நீதிபதி டி.பரத சக்கரவா்த்தி, கடவுச்சிட்டை விண்ணப்பத்தின் மீது விரைந்து முடிவெடுக்கக் கோரி பேரறிவாளன் அளித்த மனுவை பரிசீலிக்கும்படி, கடவுச்சிட்டை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.