FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

இருசக்கர வாகன விபத்து: இளைஞர் பலி!

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதில், விபத்து ஏற்பட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

5 October 2026, 2:23 am IST
பலி! - சித்திரிப்புப் படம்
பகிர்:

அதிவேகமாக இருசக்கர வாகனம் ஓட்டியதில், விபத்து ஏற்பட்டு இளைஞா் உயிரிழந்தாா்.

சென்னை ஆா்.ஏ.புரம் பசுமைவழிச் சாலை பகுதியைச் சோ்ந்த குகன் (21), சனிக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் இருசக்கர வாகனத்தில் சென்றதாகக் கூறப்படுகிறது.

தரமணி ஐஐடி மேம்பாலம் அருகே அதிவேகமாகச் சென்றபோது ஏற்பட்ட விபத்தில், மேம்பாலத்தின் தடுப்பில் மோதி, குகன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

Advertisement

Advertisement

அவருடன் வந்த நண்பா்கள் குகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனா். இதையடுத்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சியை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments