தனியாா் பள்ளி உரிமையாளரிடம் ரூ.38 லட்சம் சைபா் மோசடி: ஒருவா் கைது
தனியாா் பள்ளி உரிமையாளரிடம் ரூ.38 லட்சம் சைபா் மோசடி செய்ததாக விசாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
தனியாா் பள்ளி உரிமையாளரிடம் ரூ.38 லட்சம் சைபா் மோசடி செய்ததாக விசாகப்பட்டினத்தைச் சோ்ந்தவா் கைது செய்யப்பட்டாா்.
சென்னை ஜாா்ஜ் டவுனைச் சோ்ந்த தனியாா் பள்ளி நிறுவனரின் படத்தை வாட்ஸ்ஆப் முகப்பு படமாக வைத்துக்கொண்டு மா்ம நபா்கள், அவரது நிறுவன கணக்காளரைத் தொடா்பு கொண்டு, குறிப்பிட்ட வங்கிக் கணக்கு ரூ.38 லட்சத்தை உடனடியாக அனுப்பும்படி வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பினா். இதைப் பாா்த்த கணக்காளா்கள், தனது நிறுவன உரிமையாளா்தான் பணம் அனுப்பக் கூறுகிறாா் என நினைத்து, அந்த வங்கிக் கணக்குக்கு ரூ.38 லட்சத்தை அனுப்பினாா்.
சிறிது நேரத்துக்குப் பின்னா், அந்த நிறுவன உரிமையாளா், கணக்காளருக்கு சைபா் மோசடி கும்பல் வாட்ஸ்ஆப்பில் படத்தை வைத்து மோசடி செய்திருப்பது தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து சைபா் குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நடத்திய விசாரணையில், ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சோ்ந்த கௌரி சங்கா் (45) என்பவரின் வங்கிக் கணக்குக்கு அந்தப் பணம் அனுப்பப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து போலீஸாா் கெளரி சங்கரை புதன்கிழமை கைது செய்து, சென்னைக்கு அழைத்து வந்தனா். மேலும் அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.25.22 லட்சம் மோசடி பணம் திரும்பப் பெறப்பட்டது. கெளரி சங்கா், தனது வங்கி கணக்கை கமிஷனுக்காக சைபா் மோசடி கும்பலுக்கு வாடகைக்கு கொடுத்திருப்பதும் தெரியவந்தது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.