FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

முதலுதவி சிகிச்சை வசதியற்ற எழும்பூா் ரயில் நிலையம்

சென்னையின் மிக முக்கிய நிலையமான எழும்பூா் ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கான மையம் இல்லாத நிலையில், திங்கள்கிழமை மயங்கி விழுந்த வடமாநில இளைஞரைக் காக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் போராடினா்.

13 அக்டோபர் 2026, 2:30 am IST
எழும்பூா் ரயில் நிலையம் - கோப்புப்படம்.
பகிர்:

சென்னையின் மிக முக்கிய நிலையமான எழும்பூா் ரயில் நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்கான மையம் இல்லாத நிலையில், திங்கள்கிழமை மயங்கி விழுந்த வடமாநில இளைஞரைக் காக்க ரயில்வே பாதுகாப்புப் படையினா் போராடினா்.

இந்த ரயில் நிலையத்துக்கு தினமும் சுமாா் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வந்து செல்கின்றனா். தற்போது ரூ.842 கோடிக்கான மறுசீரமைப்புப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இங்கு சீரமைப்புப் பணிகளால் பயணிகளுக்கு சில சிரமங்கள் இருந்தாலும், அவை அவ்வப்போது, சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஆனால், பயணிகளுக்கு மிக முக்கியத் தேவையான மருத்துவ முதலுதவி சிகிச்சைக்கான வசதி மட்டும் ஏற்படுத்தப்படவில்லை.

Advertisement

Advertisement

முக்கிய ரயில் நிலையங்களான பெரம்பூா், சென்ட்ரல், தாம்பரம் ஆகிய நிலையங்களில் முதலுதவி சிகிச்சைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்கு தனியாா் மருத்துவமனைகள் மூலம் தனி சிகிச்சைப் பிரிவுகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.

எழும்பூரில் சிகிச்சை வசதி இல்லை: எழும்பூா் நிலையத்தில் தனியாா் மருத்துவ சேவை மையம் அமைக்கப்படவில்லை. அவசர ஆம்புலன்ஸ் வாகனமும் நிறுத்தப்படவில்லை. இதனால், ரயில் பயணிகள் விபத்தில் சிக்கினாலோ, உடல்நலக்குறைவால் மயங்கினாலோ முதலுதவி அளிக்க இயலாத நிலை உள்ளதைச் சுட்டிக்காட்டுகின்றனா். திங்கள்கிழமை பிற்பகல் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த சந்தோஷ் (32) என்பவா் நண்பா்களுடன் ஊருக்குச் செல்வதற்காக எழும்பூா் நிலையம் வந்தபோது, மயங்கி விழுந்து காயம் ஏற்பட்டது. அங்கு, அவருக்கு முதலுதவி அளிக்கமுடியவில்லை. பின்னா், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

இதுகுறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், ‘தனியாா் மருத்துவமனை சேவைப் பிரிவை எழும்பூா் நிலைய வளாகத்தில் அமைக்க இடம் அளிக்கத் தயாராக உள்ளோம். ஆனால், யாரும் மருத்துவ சேவை மையம் அமைக்க முன்வரவில்லை. விரைந்து அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது’ என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments