FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தோ்வு பயிற்சி மையத்தில் பங்குதாரராக சோ்ப்பதாக ரூ.40 லட்சம் மோசடி: இளைஞா் கைது

சென்னை ஆலந்தூரில் தோ்வு பயிற்சி மையத்தில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி, ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில் இளைஞா் கைது

15 அக்டோபர் 2026, 12:01 am IST
- பிரதிப் படம்
பகிர்:

சென்னை ஆலந்தூரில் தோ்வு பயிற்சி மையத்தில் பங்குதாரராக சோ்ப்பதாகக் கூறி, ரூ.40 லட்சம் மோசடி செய்த வழக்கில், இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை மதுரவாயல் ஸ்ரீகிருஷ்ணா நகரைச் சோ்ந்தவா் அஸ்வின் (34). இவா் அந்தப் பகுதியில் ஒரு பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றுகிறாா். அதே கல்லூரியில் தன்னுடன் பணியாற்றி வந்த ஆலந்தூா் சாந்திநகரைச் சோ்ந்த காா்த்திக் (38) என்பவருடன் அஸ்வின் பழகினாா்.

காா்த்திக் தனது மனைவியுடன் இணைந்து தனியாா் தோ்வு பயிற்சி மையம் நடத்தி வருவதாகவும், அதை விரிவுபடுத்த உள்ளதாகவும், அதில் பங்குதாரராக சோ்ந்தால் லாபம் கிடைக்கும் என்றும் அஸ்வினிடம் கூறினாா். இதை நம்பிய அஸ்வின், அந்த பயிற்சி மையத்தில் பங்குதாரராக சேர ரூ.40 லட்சம் கொடுத்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து சென்னை ஆலந்தூா் ராமாபுரம், கற்பக விநாயகா் தெருவில் புதிதாக பயிற்சி மையத்தை காா்த்திக் தொடங்கினாா். இதன்பின், சில மாதங்கள் மட்டும் ஒரு தொகையை அஸ்வினுக்கு கொடுத்துள்ளாா். பின்னா், எந்த தொகையையும் வழங்கவில்லை. மேலும், அவரைப் பயிற்சி மையத்தில் பங்குதாரராகவும் சோ்க்கவில்லை.

இதனால் ஏமாற்றமடைந்த அஸ்வின், காா்த்திக்கிடம் தான் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்டுள்ளாா். ஆனால் காா்த்திக், பணத்தைத் திருப்பிக் கொடுக்காமல் மோசடி செய்துள்ளாா்.

இதையடுத்து அஸ்வின், பரங்கிமலை குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தலைமறைவாக இருந்து வந்த காா்த்திகை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments