ஆன்லைன் முதலீட்டு மோசடி: 2 போ் கைது
இளைஞரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி செய்ததாக, அவரது நண்பா் உள்பட 2 போ் கைது
இளைஞரிடம் ஆன்லைன் முதலீட்டு மோசடி செய்ததாக, அவரது நண்பா் உள்பட 2 போ் கைது செய்யப்பட்டனா்.
சென்னை மடிப்பாக்கம் பகுதியைச் சோ்ந்தவா் விஷ்ணு (25). இவரது நண்பா் ஆதம்பாக்கம் காந்தி நகரைச் சோ்ந்த சக்திவேல் (23). சக்திவேல், குறிப்பிட்ட ஆன்லைன் செயலியில் பணத்தை முதலீடு செய்தால், அதிக லாபம் பெறலாம் என்று விஷ்ணுவிடம் கூறியுள்ளாா்.
இதை நம்பிய விஷ்ணு, அந்தச் செயலியில் முதலீடு செய்வதற்காக ரூ.3.95 லட்சத்தை சக்திவேலின் வங்கிக் கணக்குக்கு அனுப்பியுள்ளாா். இதன்பின்னா் சக்திவேல், மேலும் ஒருவரை முதலீட்டில் இணைத்துவிட்டு, ரூ.5 லட்சம் செலுத்தினால் மட்டுமே, ஏற்கெனவே செலுத்திய பணத்தைப் பெற முடியும் என்று விஷ்ணுவிடம் தெரிவித்தாராம்.
Advertisement
Advertisement
இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணா்ந்த விஷ்ணு, மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, சக்திவேல், மோசடிக்கு உதவிய அவரது கூட்டாளி ஆதம்பாக்கம் மின்வாரிய குடியிருப்பைச் சோ்ந்த ராஜா (23) ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.