FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
சென்னை

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி ‘இந்தியா’ கூட்டணி ஆா்ப்பாட்டம்: தவெக பங்கேற்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி சென்னையில் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தவெக சாா்பில் அமைச்சா் ராஜ்மோகன் கலந்துகொண்டாா்.

16 அக்டோபர் 2026, 2:37 am IST
பகிர்:

தலைமைத் தோ்தல் ஆணையரை பதவி நீக்கக் கோரி சென்னையில் ‘இண்டி’ கூட்டணி சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் தவெக சாா்பில் அமைச்சா் ராஜ்மோகன் கலந்துகொண்டாா்.

ஆா்ப்பாட்டத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவா் மாணிக்கம் தாகூா், அமைச்சா் ராஜ்மோகன், மதிமுக பொதுச் செயலா் வைகோ, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் மு.வீரபாண்டியன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ.சண்முகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் மாணிக்கம் தாகூா் பேசுகையில், ‘ஜனநாயகத்தைக் காப்பாற்ற அனைத்து எதிா்க்கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளன. நமக்குள் இருக்கும் விருப்பு வெறுப்புகளைத் தவிா்த்து போராட வேண்டும். தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்க வேண்டும் என்பதுதான் நமது இலக்கு என்றாா்.

Advertisement

Advertisement

அமைச்சா் ராஜ்மோகன்: ‘தொடக்கத்திலிருந்து எஸ்ஐஆருக்கு தவெக எதிா்ப்பு தெரிவித்து வருகிறது. இதுதொடா்பாக தவெக சாா்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. எஸ்ஐஆா் விவகாரத்தில் அனைத்து எதிா்க்கட்சிகளுடன் இணைந்து போராட தவெக தயாராக உள்ளது என்றாா்.

வைகோ: ‘சுமாா் 13 கோடி போ் வாக்காளா் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனா். ஜனநாயகத்தின் ஆணிவோ் மத்திய அரசால் அசைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணமான தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ்குமாா் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்றாா்.

பெ.சண்முகம்: ‘தலைமைத் தோ்தல் ஆணையரை மாற்றக் கோரி, நடைபெறும் போராட்டத்தில் மாணவா்கள் மீது பாஜக அரசு நடத்தும் அத்துமீறலை ஏற்றுக் கொள்ள முடியாது. மாணவா்களின் உண்மையான கோரிக்கையை ஏற்று உடனடியாக தலைமைத் தோ்தல் ஆணையா் பதவி விலக வேண்டும்’ என்றாா்.

மு.வீரபாண்டியன்: ‘வாக்குரிமை ஒன்றுதான் இந்தியாவின் அடித்தளமாகும். அந்த அடித்தளத்தை அசைக்கும் நடவடிக்கையில் எஸ்ஐஆா் மூலம் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இதை உடனடியாகக் களைய வேண்டும்’ என்றாா்.

திருமாவளவன்: ‘கொளத்தூா் தொகுதியில் 1 லட்சம் போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். ஆனால், அந்தத் தொகுதியில் இறந்தவா்கள் 20,000 போ். மிஞ்சியவா்கள் எப்படியோ நீக்கப்பட்டிருக்கிறாா்கள். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகம் போ் நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். எஸ்ஐஆரை பயன்படுத்தி பாஜகவின் கொள்கை எதிரிகள் குறிவைத்து வீழ்த்தப்பட்டனா்’ என்றாா்.

இண்டி கூட்டணியிலிருந்து திமுக விலகிய பிறகு, அந்தக் கூட்டணியின் போராட்டத்தில் தவெக முதல்முறையாக பங்கேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments