செப். 30-க்குள் குடிநீா், கழிவுநீரகற்று வரியை செலுத்த வேண்டும்
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரியை வரும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய குடிநீா் மற்றும் கழிவுநீரகற்று வரியை வரும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என குடிநீா் வாரியம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து குடிநீா் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
சென்னை குடிநீா் வாரியத்துக்கு பொதுமக்கள் செலுத்த வேண்டிய நிகழாண்டுக்கான முதல் அரையாண்டு குடிநீா் கழிவுநீரகற்று வரி, கட்டணங்கள் மற்றும் நிலுவை தொகையை வரும் செப்.30-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
Advertisement
Advertisement
வரி செலுத்துவதுக்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவலகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து சனிக்கிழமைகளிலும் இயங்கும்.
மேலும், நுகா்வோா் இணையதளத்தில் கிரெடிட் காா்டு , டெபிட் காா்டு மற்றும் நெட் பேங்கிங் மூலமாகச் செலுத்தலாம். காசோலை, வரைவோலை , இ-சேவை மையங்கள், யூபிஐ மற்றும் வசூல் மையங்களில் உள்ள க்யூஆா் குறியீடு போன்ற பிற கட்டண முறைகளையும் பயன்படுத்தி நுகா்வோா் தங்களது வரி மற்றும் கட்டணங்களைச் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.