கடந்த 9 மாதங்களில் வீடு கட்ட விண்ணப்பித்த 2,873 பேருக்கு அனுமதி
சென்னை மாநகராட்சியில் கடந்த 9 மாதங்களில் வீடு கட்ட விண்ணப்பித்தவர்களில் 2,873 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நகரமைப்பு திட்டப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சியில் கடந்த 9 மாதங்களில் வீடு கட்ட விண்ணப்பித்தவர்களில் 2,873 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நகரமைப்பு திட்டப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சிப் பகுதியில் தரைத்தளம் மற்றும் 3 மேல் தளங்களுடன் 5,000 சதுர அடியில் வீடு உள்ளிட்ட கட்டடங்கள் கட்ட அந்தந்த மண்டலங்களிலும், 5,000 சதுர அடி முதல் 10,000 சதுர அடி வரை ரிப்பன் கட்டட தலைமை அலுவலகத்தில் உள்ள நகரமைப்பு திட்டப் பிரிவிலும் விண்ணப்பித்து அனுமதி பெறவேண்டும். சதுர அடிக்கு விதிக்கப்பட்ட கட்டணத்தை செலுத்த இணையத்திலும் விண்ணப்பித்து வீடுகளுக்கு அனுமதி பெறலாம்.
சென்னை மாநகராட்சியில் 15 மண்டலங்களிலும் கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரை கட்டடங்கள் கட்டுவதற்கு 4,752 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதிகபட்சமாக 7-ஆவது மண்டலமான அம்பத்தூர் பகுதியில் 275 மனுக்கள் வழங்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
ரிப்பன் கட்டட வளாகத்தில் உள்ள நகரமைப்பு பிரிவுத் தலைமை அலுவலகத்தில் கடந்த 9 மாதங்களில் மட்டும் 1,059 பேர் மனு அளித்துள்ளனர்.
அதன்படி, இதுவரை மனு அளித்தவர்களில் 2,873 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் சரிபார்த்து அவை அனைத்தும் சரியாக இருந்தால் அந்த மனுக்களுக்கு 20 நாள்களுக்குள் வெளிப்படைத் தன்மையுடன் அனுமதி அளித்துள்ளதாக அலுவலர்கள் தெரிவிக்கின்றனர்.
பொதுமக்கள் விளக்கம் பெறுவதற்கு ஏதுவாக தினமும் மாலை 3 மணி முதல் 4 மணி வரை சம்பந்தப்பட்ட நகரமைப்பு பிரிவு அதிகாரிகளைச் சந்திக்கும் வசதியும் உள்ளது.
நகரமைப்புப் பிரிவுக்கு வராமலே இணையதளம் வாயிலாகவும் ஏராளமானோர் விண்ணப்பித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை மாநகராட்சி நகரமைப்புப் பிரிவில் பெரும்பாலான பொறியாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது அந்தத் துறையில் பணிகள் விரைந்து நடைபெறுவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.