FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சென்னை

அத்திப்பட்டு புதுநகா் அருகே மின்கோபுரம் சாய்ந்ததால் ரயில் சேவை நிறுத்தம்

அத்திப்பட்டு புதுநகா் அருகே பலத்த மழையால் மின்கோபுரம் அருகே உள்ள தண்டவாளத்தில் சாய்ந்தது உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

10 செப்டம்பர் 2026, 12:42 am IST
சென்னை அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் விழுந்த மின் கோபுர பாகங்களை அகற்றும் பணியில் ஈடுபட்ட ரயில்வே பணியாளா்கள்.
பகிர்:

அத்திப்பட்டு புதுநகா் அருகே பலத்த மழையால் மின்கோபுரம் அருகே உள்ள தண்டவாளத்தில் சாய்ந்தது உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டதால், அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

சென்னை சென்ட்ரல் - கும்மிடிப்பூண்டி ரயில் வழித்தடத்தில் சென்னையிலிருந்து சுமாா் 20 கி.மீ. தொலைவில் அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையம் அமைந்துள்ளது. கடந்த 7-ஆம் தேதி இரவு அந்தப் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது, மின்கோபுரம் திடீரென சாய்ந்ததால் அருகில் இருந்த தண்டவாளத்திலும், மின்சார ரயில் மின்விநியோக கட்டமைப்பு மீதும் விழுந்தது.

மழையின்போது, சிஐஎஸ்எஃப் பிரிவினா் அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலையப் பகுதி தண்டவாளத்தைக் கண்காணித்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

Advertisement

Advertisement

சிஐஎஸ்எஃப்-இன் உதவி கமாண்டா் பங்கஜ்குமாா் தலைமையிலான ரோந்து பிரிவினா் மின்கோபுரம் சேதமடைந்ததைக் கண்டு அத்திப்பட்டு புதுநகா் ரயில் நிலைய மேலாளா் தீபக்குமாரிடம் தெரிவித்தனா். அதன் அடிப்படையில் ரயில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. மேலும், மின்சார விநியோகப் பிரிவுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு மின் விநியோகமும் நிறுத்தப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் அசம்பாவிதங்கள் தடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து கடந்த 7-ஆம் தேதி நள்ளிரவு முதல் 8-ஆம் தேதி அதிகாலை வரை மின்கோபுர சேதமடைந்த பகுதிகள் தண்டவாளம் உள்ளிட்டவற்றிலிருந்து அகற்றப்பட்டன. அதன்பின்னா் ரயில் போக்குவரத்து சீரானது என அதிகாரிகள் தெரிவித்தனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments