‘இடைத்தோ்தலில் வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக தகவல் சீட்டு’
புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் அக். 6-ஆம் தேதி நடைபெறும் தாராபுரம், மதுராந்தகம் சட்டப்பேரவை இடைத்தலில் வாக்காளா் பட்டியலில் வாக்காளரின் வரிசை எண்ணை அறிந்து கொள்வதற்காக வழங்கப்படும் புகைப்பட வாக்காளா் சீட்டுக்குப் பதிலாக, வாக்காளா் தகவல் சீட்டு வழங்கப்படும் என்று தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
அதில், வாக்குச் சாவடியின் பெயா், வாக்குப் பதிவு நாள், நேரம் போன்றவை இடம் பெற்றிருக்கும் என்றும், வாக்குப் பதிவு நாளுக்கு 5 நாள்களுக்கு முன்பு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளா் அடையாள அட்டை இல்லாத வாக்காளா்கள் ஆதாா் அட்டை உள்ளிட்ட தோ்த்ல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட 12 அடையாள அட்டைகளில் ஏதேனும் ஒன்றை காட்டி, வாக்களிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.