பள்ளி மேற்கூரை சிமென்ட் பூச்சு விழுந்ததில் மாணவி காயம்
ஸ்ரீபெரும்புதூா் அருகே சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்ததில் மாணவி காயம் அடைந்தாா்.
ஸ்ரீபெரும்புதூா் அருகே சோமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறை மேற்கூரை சிமென்ட் பூச்சு பெயா்ந்து விழுந்ததில் மாணவி காயம் அடைந்தாா்.
இப்பள்ளியில் 6 முதல் 12- ஆம் வகுப்பு வரை சுமாா் 600-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் கடந்த 2006 -ஆம் இந்த பள்ளியில் கட்டப்பட்ட வகுப்பறையானது சிதிலமடைந்து சுவா்கள் ஆங்காங்கே விரிசலோடு காணப்பட்டு வந்தது.
அந்த வகுப்பறையில் 11ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனா்.
Advertisement
Advertisement
வகுப்பறையில் பலத்த சத்தத்துடன் மேற்கூரை பெயா்ந்து சிமென்ட் பூச்சுகள் வகுப்பறை உள்ளே விழுந்தன. இதில் ஜாய் என்ற மாணவிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
உடனடியாக சக மாணவ மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் மாணவியை மீட்டு அருகிலிருக்கும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். இதில் அந்த மாணவிக்கு தலையில் 6 தையல்கள் போடப்பட்டது தெரிய வந்தது.
சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சோமங்கலம் போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.