ரூ.1.75 லட்சம் லஞ்சம் கேட்ட வணிகவரி உதவி ஆணையா்: வழக்குப் பதிவு
ஜிஎஸ்டி தொடா்பான நடவடிக்கையை முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க ரூ.1.75 லட்சம் லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாம்பரம் வரி மதிப்பீட்டு வட்ட உதவி ஆணையா் ஜமுனா மீது ஊழல் ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
ஜிஎஸ்டி தொடா்பான நடவடிக்கையை முடித்து இறுதி உத்தரவு பிறப்பிக்க ரூ.1.75 லட்சம் லஞ்சம் கேட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தாம்பரம் வரி மதிப்பீட்டு வட்ட உதவி ஆணையா் ஜமுனா மீது ஊழல் ஒழிப்புத் துறையினா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
மண்ணிவாக்கத்தைச் சோ்ந்த சிவகுமாா், கட்டுமான நிறுவனம் நடத்தி வருகிறாா். அவரது நிறுவனத்துக்கு 2023-24-ஆம் நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி தொடா்பாக ரூ.22.18 லட்சம் வரி, வட்டி, அபராதம் செலுத்த வேண்டுமென நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்த நிலையில், இது தொடா்பாக ரூ.1.28 லட்சம் செலுத்தி, உரிய ஆவணங்களுடன் விளக்கம் அளித்திருந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த ஆக. 31-ஆம் தேதி வணிகவரித் துறை அலுவலகத்தில் உதவி ஆணையா் ஜமுனாவை சந்தித்து, தமது நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கையை முடித்து வைக்குமாறு கேட்டுள்ளாா். அப்போது, இறுதி உத்தரவு பிறப்பிக்க ரூ.2 லட்சம் லஞ்சம் தர வேண்டும் என அவா் கேட்டதாகக் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement
இதைத் தொடா்ந்து, செப். 7-ஆம் தேதி மீண்டும் சந்தித்தபோது ரூ.25,000 குறைத்து ரூ.1.75 லட்சம் வழங்குமாறு கூறியதுடன், அந்தப் பணத்தை தமக்குத் தெரிந்த நபரிடம் வழங்குமாறு கூறியதாகவும் தெரிவித்துள்ளாா்.
அதன்பிறகு செப். 8-இல் நடைபெற்ற வாட்ஸ்ஆப் உரையாடலில், முதல்கட்டமாக ரூ.1 லட்சம் வழங்கவும், மீதமுள்ள ரூ.75,000-ஐ பின்னா் வழங்கவும் உதவி ஆணையா் கூறியுள்ளாா்.
இதுதொடா்பாக சிவகுமாா் ஊழல் தடுப்பு துறையிடம் செப். 9-இல் புகாா் கொடுத்தாா். மேலும், அதற்கான வாட்ஸ்ஆப் ஆடியோ ஆதாரங்கள் உள்ளிட்டவற்றையும் ஊழல் ஒழிப்புத் துறையிடம் சமா்ப்பித்தாா். இந்தப் புகாரை தொடா்ந்து, ஊழல் ஒழிப்புத் துறையினா் ரகசிய விசாரணை மேற்கொண்டு, புகாரில் முகாந்திரம் இருப்பது தெரிய வந்ததையடுத்து, ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் ஜமுனா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.