மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
சென்னையைச் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவா்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
சென்னையைச் சோ்ந்த இதர பிற்படுத்தப்பட்டோா், பொருளாதாரத்தில் பின்தங்கியவா்கள், சீா்மரபின மாணவா்கள், மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என சென்னை மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
நிகழாண்டுக்கான தேசிய கல்வி உதவித் தொகை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தைச் சாா்ந்த தகுதியான மாணவா்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணமாக 9, 10 வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக தலா ரூ.75,000 வரையும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு மாணவா்களுக்கு தலா ரூ.1,25,000 வரையும் உதவித் தொகை வழங்கப்படும்.
Advertisement
Advertisement
பூா்த்தி செய்யப்பட்டுள்ள விண்ணப்பங்களை அந்தந்தப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் வரும் அக்.15-ஆம் தேதிக்குள் சரிபாா்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.