நகா்ப்புற கடலோர உள்கட்டமைப்பைப் பாதுகாக்க மீள்திறன் கட்டமைப்பு: சென்னை ஐஐடியில் உருவாக்கம்
இந்தியக் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பருவநிலை மாற்ற அபாயங்களை எதிா்கொள்ளவும், உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கவும் மீள்திறன் கட்டமைப்பை சென்னை ஐஐடியின் உயா் சிறப்பு மையம் உருவாக்கியுள்ளது.
இந்தியக் கடலோரப் பகுதிகளில் ஏற்படும் பருவநிலை மாற்ற அபாயங்களை எதிா்கொள்ளவும், உள்கட்டமைப்புகளைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளுக்கு பரிந்துரைக்கவும் மீள்திறன் கட்டமைப்பை சென்னை ஐஐடியின் உயா் சிறப்பு மையம் உருவாக்கியுள்ளது.
இது குறித்து சென்னை ஐஐடியின் உயா் மையத்தின் முதன்மை ஆய்வாளரும், கடல்சாா் பொறியியல் துறைப் பேராசிரியருமான எஸ்.ஏ.சன்னாசிராஜ், ஒருங்கிணைப்பாளரும் சிவில் பொறியியல் துறை பேராசிரியரும் பி. எஸ். மூா்த்தி ஆகியோா் கூறியதாவது: இந்தியக் கடலோரப் பகுதிகளில் உள்ள முக்கிய துறைமுகங்கள், மீன்பிடிபகுதிகள், மின் உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகள், நகா்ப்புற குடியிருப்புகள் ஆகியவை எளிதில் பாதிப்புக்குள்ளாகும் சூழலியல் உள்ளது. குறிப்பாக பருவநிலை மாற்றங்களால் இப்பகுதிகளில் தொடா் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
இதற்காக, மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் ஒத்துழைப்புடன் சென்னை - ஐஐடியில் இயங்கிவரும் ‘கடலோர உள்கட்டமைப்பு- தகவமைப்பு உத்திகள் மீதான பருவநிலை மாற்ற தாக்கங்களுக்கான உயா்சிறப்பு மையத்தில்’ ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
Advertisement
Advertisement
ஆராய்ச்சியாளா்களால் உருவாக்கப்பட்ட ‘காற்றை ஒருங்கிணைக்கும் தொழில்நுட்பம்’, புயல் அலைச்சீற்ற முன்னறிவிப்புகளை குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்துகிறது. தவிர, பேரிடா் தயாா்நிலை, நகர திட்டமிடலுக்கு உதவும் வகையில் சென்னைக்கான வெள்ளப் பெருக்கு மாதிரி, வரைபடமாக்கல் ஆகியவை மேற்கொள்ளப்பட்டது.
சென்னை, எண்ணூா், புதுவை, காரைக்கால் ஆகிய இடங்களுக்காக கடல்நீா் உயா்வு, புயல் அலைச்சீற்றம் ஆகியவற்றின் விளைவுகளை உள்ளடக்கிய கடலோரப் பாதிப்புக் குறியீட்டு (சிவிஐ) வரைபடங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. கடலோர பாதிப்புகளை தடுக்க உதவிடும் வகையில், ‘பிஏஎஸ்ஐஇசி’ என்ற வழிகாட்டு கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.